பெண்ணாடம் அருகே ெரயிலில் அடிபட்டு இறந்த 10-ம் வகுப்பு மாணவர்

ஆஷிஷ்குமார் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
ஆஷிஷ்குமார்
ஆஷிஷ்குமார்
Published on

கடலுார்: 

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன். அவரது மகன் ஆஷிஷ்குமார்(வயது 14) இவர் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் செல்லும் விழுப்புரம் – திருச்சி ரயில் மார்க்கத்தில் இயற்கை உபாதைக்கு ரயில் பாதையை கடந்து சென்று மீண்டும் அவ்வழியே கடந்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமை யிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com