என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடலூர் அருகே தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்
  X

  கடலூர் அருகே தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
  • அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்‌.

  கடலூர்:

  கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த 6 பேர் கும்பல் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இதனால் பஸ் கண்டக்டர்கள் அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்‌. அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பஸ்சை நிறுத்தினர். அப்போது பஸ்சில் இருந்த கும்பல் திடீரென்று தப்பி ஓடினர்.

  மீண்டும் அந்த பஸ் கடலூர் நோக்கி மீனாட்சி பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கும்பல் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடத்துனர்கள் அன்பரசன் மற்றும் சூர்யாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்‌. இதில் காயம் அடைந்த 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் டிரைவர் தனவேல் கொடுத்த புகாரின் பேரில் வடலூரை சேர்ந்த லோலிசின், ஹரிஷ், அப்பு, வினோத் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

  Next Story
  ×