கடலூர் அருகே தனியார் பஸ் கண்ணாடி மீது கல்வீச்சு தாக்குதல் பயணிகள் அலறல்

பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர்.
கடலூர் அருகே தனியார் பஸ் கண்ணாடி மீது கல்வீச்சு தாக்குதல்  பயணிகள் அலறல்
Published on

கடலூர்:

விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சம்பவத்தன்று தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது‌. அப்போது கடலூர் அடுத்த பெத்த நாயக்கன் குப்பம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு நபர்கள் பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி கத்தினர். இதனைத் தொடர்ந்து 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டிரைவர் ராஜவன்னியன், நடத்துனர் பாலமுருகன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com