என் மலர்
கடலூர்
- அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது.
- லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த சிவசங்கர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த பஸ் பண்ருட்டி அருகே கண்டரக்ேகாட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதனால் பயணிகள் கூச்சல்போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார்.
- பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.
கடலூர்:
திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார். அப்போது அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பின்பக்கம் அமர்ந்திருந்த 2 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மணல் லாரி மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமிர்தலிங்கம் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
- சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 65). இவர் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடுவீரப்பட்டு பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அமிர்தலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அமிர்தலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உமா சங்கரி மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிசேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி உமா சங்கரி (வயது 40). மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக உமா சங்கரி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தந்தை சந்திரசேகர் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.
கடலூர்:
நெய்வேலி அருகே பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே ஊமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.
இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கார் மற்றும் இரண்டு நபர்களை பிடித்து வந்து ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சங்கர் ராம் (வயது 34), லக்குமா ராம் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 16 மூட்டைகள் ஹான்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா, 12 மூட்டைகள் புகையிலை போன்றவற்றை கொண்டு வந்தது தெரிய வந்தது . மேலும் இதன் எடை சுமார் 350 கிலோ 6 லட்சம் மதிப்பாகும்.
இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராம், லக்குமா ராம் ஆகியோரை கைது செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
- ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் குணசேகரன். அவரது மனைவி கஸ்தூரி (வயது32)இவருக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கஸ்தூரி கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.நேற்று அவருக்கு அடி வயிறு வலிப்பதாகவும் ரத்த கசிவு ஏற்படுவதாகும் கூறி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை பெற்றார்.கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை அவரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் கஸ்தூரி ஆவட்டியில் உள்ள போலி மருத்துவர் சுரேஷ் என்ப வரிடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட தாக கூறியுள்ளார். ரத்தக் கசிவு காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சுரேஷ் ஏற்கனவே ராமநத்தம் போலீசாரால் வழக்கு பதிவு செய்து மருத்துவ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது பிணையில் வந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து அவர் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் கஸ்தூரி கூறியுள்ளது உண்மையா அந்த கடையில் தான் மாத்திரை வாங்கினாரா என்பது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே அடரி கிராமத்தில் சேலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கபிலன் (வயது32) . இவர் விருத்தாச்சலம் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீடு மாடத்தில் வைப்பது வழக்கம். அதன்படி வழக்கம் போல் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இவர் மதியம் தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்த குமார் மற்றும் போலீ சார் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்த மாக கொக்கு பாளையம் சந்திப்பில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேர் போலீ சாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவை சேர்ந்த புருஷோத்த மன் (வயது 20), பண்ருட்டி நவீன் குமார் (22) எனதெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரில் உள்ள முருகன் என்ப வரின் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைதான வாலிபர் புருஷோத்தமன் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்ப தாவது:-
நானும் நவீன்குமாரும் சிறு வயது முதல் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் மது, கஞ்சா பழக்கம் உண்டு. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கொத்தனார் வேலைக்கு செல்வேன் மற்ற நாட்களில் அடையாளம் தெரியாத ஆட்கள் கொண்டுவந்து தரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தோம் அதில் அதிக லாபம் கிடைத்தது.
ஒரு முறை சென்னை சென்றபோது அங்கிருந்த ஒருவர் கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர். அதை வளர்க்க எங்கள் வீட்டில் இடம் இல்லாததால் எனது பெரியம்மா வீட்டில் வளர்த்து, அந்த செடியை விற்பனை செய்து வந்தோம். என்று கூறினர்.அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறை யில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார்.
- இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி சொர்ணாவூர் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்கிற மனைவி, ஒரு மகன் உள்ளனர் சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அப்போது சந்தத்தோப்பு திடலில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அய்யப்பன் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார்.
- அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
மேலும், பண்ருட்டி-செஞ்சி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் பகுதியிலும் இவர் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
வங்கக்கடலில் உரு வாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மற்றும் சிறிய வகை பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவிலான மீன்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்த அதலை மீன் 450 ரூபாய்க்கும்,ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.






