என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திட்டக்குடி அருகே அரசு பஸ் மீது லாரி  மோதல்: 2 பேர் காயம்
  X

   அரசு பஸ்மீது மோதிய லாரியை படத்தில் காணலாம்.

  திட்டக்குடி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்: 2 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார்.
  • பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.

  கடலூர்:

  திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார். அப்போது அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பின்பக்கம் அமர்ந்திருந்த 2 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

  மணல் லாரி மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×