என் மலர்
நீங்கள் தேடியது "Loss in business"
- உமா சங்கரி மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிசேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி உமா சங்கரி (வயது 40). மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக உமா சங்கரி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தந்தை சந்திரசேகர் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் அயூப்கான் (வயது 48), இரும்பு வியாபாரி. இவருக்கு ஹரினா பேகம், பரக்கத் நிஷா என 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர்.
2 மனைவிகளும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று பரக்கத் நிஷா, கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
இன்று காலை அவர் வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பரக்கத் நிஷா, அங்கு கணவர் அயூப்கான் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடந்த சில நாட்களாக அயூப்கான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.






