என் மலர்
கடலூர்
- குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார்.
- வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியில் முத்துக்கு மாரசாமி கோவில் பின்பு றத்தில் குளம் உள்ளது. இக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், ,பேரில் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறந்து கிடந்த உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குளத்தில் இறந்த உடலை மீட்பதற்காக கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கடலூர் முதுநகர் போலீசார் விசார ணையில்,கடலூர் முதுநகர் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கலைமணி (வயது 23). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கலைமணி, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகில் உள்ள முத்துக்குமாரசாமி கோயில் பின்புறம் உள்ள குளத்தில் கலைமணி பிணமாக இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் இறந்த கலைமணி 3 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் எப்படி குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார்? கொலையா? அல்லது தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் முதுநகரில் கோவில் அருகே குளத்தில் வாலிபர் பணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது
- திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை..
கடலூா:
சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த, பிரபலமான சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர் இக்கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக சோமன் மண்டபத்தில் உள்ள ரிஷி கோபுரத்தில் சிறிய அளவிலாக சிலைகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில் ரிஷி கோபுரத்தில் இருந்த திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை. இது தொடர்பாக இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பழனியப்பன் சிதம்பரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்க்டபெர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம்
- இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் கமிஷனர் பொறுப்பு மகேஸ்வரி நகராட்சி பொறியாளர் பாண்டு துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு- பாரூக் அலி :- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது ஆனால் இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி யார் யாருக்கு வரி பாக்கி உள்ளது என தெரிவித்தால் அதனை எளிதாக வசூல் செய்வதற்கு ஏதுவாக அமையும் மேலும் வரி தொடர்பாக அதற்கு குழு உள்ளது இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எந்த கூட்டமும் கூட்டவில்லை ஆகையால் வரி வசூல் செய்வதற்கு கவுன்சிலருடன் இணைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ராணி: - நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெற்று வருகின்றது ஆனால் எங்கள் வார்டுக்கு இதுவரை 100 நாள் திட்டப்பணிகள் ஒதுக்கவில்லை இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் எங்களிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் எங்களால் பதில் கூற முடியவில்லை மேலும் எங்கள் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாராததால் பொதுமக்களிடையே வீண் பிரச்சனை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தமிழன்:- நகராட்சியில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள் ஆனால் எங்கள் பகுதிகளில் அதிகளவில் குடிசை வாழ் மக்கள் உள்ளதால் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார் அப்போது கவுன்சிலர் பூபாலன் , கூட்டம் தொடங்கியதில் இருந்து அதிக நேரம் பேசி வருகிறீர்கள் மேலும் எங்கள் பகுதியிலும் மண் சாலை உள்ளது அதனை தார்சாலையாக மாற்ற வேண்டும். மேலும் நாங்கள் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என கூறினார். அப்போது முத்தமிழன், எனது வார்டு தொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகின்றேன் உங்களுக்கு தார் சாலை வேண்டுமென்றால் கோரிக்கை வையுங்கள் என தெரிவித்தார் அப்போது இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கொண்டு வந்துள்ள அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து கூட்டத்தை முடித்தார் அப்போது பெண் கவுன்சிலரின் கணவர் பிச்சை என்பவர் தி.மு.க. கவுன்சிலர் முத்தமிழனிடம் நகர்மன்ற கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினர் . இதில் முத்தமிழன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம். நீங்கள் இதுபோல் இங்கு வந்து பேசக்கூடாது அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இலக்கியா கணவர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன் எங்கள் பகுதியிலும் அதிகளவில் குடிசை பகுதி உள்ளது மேலும் மண்சாலை அதிக அளவில் உள்ளது என கேள்வி எழுப்பிய போது மீண்டும் முத்தமிழனுக்கும் சாமிநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலரான இலக்கியா பேச வேண்டும் ஆனால் இந்த கூட்டரங்கில் கவுன்சிலரின் கணவரான நீங்கள் எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பினர். இதில் ஜெயபிரபா மணிவண்ணனுக்கும், சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஜெயபிரபா மணிவண்ணன் கணவர் திமுக நகர செயலாளர் மணிவண்ணன் இதனை தட்டி கேட்டபோது மணிவண்ணனுக்கும் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
+2
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
- விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,
கடலூர்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும். 2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.
- சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார்.
- பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். அவரது மகள் சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார் இவர்கடந்த 28-ந்தேதி நர்சிங் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சினேகாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை
எனவே இதுகுறித்து பண்ருட்டி போலீசில் தாயார் அன்னக்கிளிபுகார் செய்தார். புகார் மனுவில் நர்சிங் பள்ளிக்கு சினேகா செல்லும் போது எல்.என். புரம்,அய்யனார் கோவில் வழியாக செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்தசரண்ராஜ் (22)பழக்கம் ஏற்பட்டு உள்ளது.எனவே சினேகாவை சரண்ராஜ் அழைத்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார் இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சினேகாவை தேடி வருகின்றனர்.
- இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர்.
- வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர். இன்று காலை நகர்மன்ற கூட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணனுக்கும், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர செயலாளர் மணிவண்ணன் நகர தி.மு.க. அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுஉஇதன் காரணமாக இரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் திரண்டனர்.
மேலும் வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் இரு தரப்பினரும் அமைதியாக செல்லுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
- கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது,
- இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது.
கடலூர்:
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பதாகும்.தையொட்டி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. எனவே, கடலில் சூறைக்காற்றானது 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிைல ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது. ஏற்கனவே ஆழ்கடலில் விசைப்படகுகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அல்லது அருகில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்.
இந்த உத்தரவை மீறி மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் அவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. விசைப்படகுகளை தவிர்த்து 3,500 படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பண்ருட்டியில் ரவுடிகளின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி, புதுப்பேட்டையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ்,டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி)ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.
மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
- நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்
- கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கடலூர்:
சிதம்பரம் பஸ் நிலையம் புறக்காவல் நிலையத்திற்கு எதிரில் செல்போன் கடை உள்ளது. நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.
வழக்கம்போல் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் நகர போலீசார் திருட்டு நடந்த கடைக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு முன்பு இருக்கும் கடையில் மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது.
- சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
- பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம் எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்க டேசனுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார் அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்தி விட்டார். என்றாலும் ெசல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்ட மிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கி வர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார். அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடே சனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்க ளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சா வடி போலீஸ் நிலை யத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீ சார் வழக்குபதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்கா தலன் சண்முகம் ஆகி யோரை போலீஸ் நிலை யத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக் காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து ெகால்ல முயன்றதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இன்று முதல் 3-ந்தேதி வரை திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 7-ந்தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.
அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, நீலம், சிவப்பு என 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம்.
சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 152-ம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவில் வருகிற இன்று முதல் 3-ந்தேதி வரை ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து 10 மணி அளவில் சத்திய ஞானசபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் தருமச்சாலை மேடையில் திருஅருட்பாஇசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் 7-ந்தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
தரிசன விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய ஆணையர், கூடுதல் ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி சத்திய ஞான சபை திடலை சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- போலீசார் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார்.
- சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.
அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்திவிட்டார். என்றாலும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கிவர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார்.
அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






