என் மலர்
கடலூர்
- கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது.
- அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.
கடலூர்:
கடலூர் துறை முகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிப்ப தற்காக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
இதில் தினந்தோறும் வஞ்சிரம், வவ்வால், பன்னி சாத்தான், சங்கரா மீன், திருக்கை மீன் உள்ளிட்ட மீன்கள் பிடித்து வருகின்றனர். திருக்கை மீன்களில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை உள்ளிட்ட 3 வகைகள் உள்ளன.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது. அப்போது வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் மிகவும் அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.
இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், இதுவரை 3 வகை திருக்கை மீன்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும் வெள்ளை திருக்கை மீனை தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பார்ப்பதாகவும் கூறினர். இதனால் இது ஒரு அபூர்வ வகை மீன் என தெரிவித்தார்.
- பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர்.
- ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.
கடலூர்:
புதுப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அனுப்பி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் அவரவர்களின் ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டித்தனர். பள்ளி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது ஆசிரியர்களிடம் கூறி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சண்டையிடக் கூடாது என்று அறிவுரை கூறினர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
- தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கருக்கையைச் சேர்ந்தவர் மணி இவரது மனைவி மீனா (வயது 30) நிறை மாத கர்ப்பிணி. இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அப்போது செம்மேடு அருகே வந்தபோது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் ஆம்புலன்ஸில் மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில் மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.
- மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்..
கடலூர்:
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது இதனை அடுத்து நேற்று மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி இரவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.
இந்த மழை கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், முதுநகர், செம்மண்டலம், பாலூர் நடுவீரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் துறைமுக பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டித்து மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடலோரப் பகுதி பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தெரிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் துறைமுகப்பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை 31-ம் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீறி சென்றால் அவர்களுக்கு வழங்க ப்படும் மானியமும் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர். தற்போது கடலூர் துறைமுக பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
- உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம்:
கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அருகே வரகூர் பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.
இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார். அதில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருந்தது.
- டிரைவர் மனோகரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகு மார் ஆலப்பாக்கம் செக் போஸ்ட் பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார். அதில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருந்தது. இது குறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் இந்த இரும்புகள் அனைத்தும் என்.ஓ.சி.எல். கம்பெனியில் திருடியது என போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கடலூர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்த டிரைவர் மனோகரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
- இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது
கடலூர்:
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
. இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- தனது மனைவி எழிலரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தினார்.
கடலூர்:
கடலூர் அருகே செல்லஞ்சேரி சேர்ந்தவர் பாவாடை ராயன். இவரது மனைவி எழிலரசி (வயது 28). இவர்கள் கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாவடைராயன் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி எழிலரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர்கைது .
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தநர்,
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார்,சப்இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில்ஈடுபட்டுஇருந்தனர்.அப்போதுபண்ருட்டி அடுத்த சிறுகிராமம்கிழக்குத் தெரு தாமஸ் (24) கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான கஞ்சாபொட்டலங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார்.
- இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் லைன் 7-வது தெருவை சேர்ந்தவர் வாசு பிரசாத் (வயது55). இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார். இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
- இன்று காலையில்,மணமகனை காணவில்லை. .
கடலூர்:
கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டத அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று மாலை வந்தடைந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர் .
இன்று காலையில் வெகுநேரமாகியும் ரூமை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து ரூமுக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மருநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.
- சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது.
- ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும்.
கடலூா:
புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் 2 விபத்துகளில்2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது இது சம்பந்தமாக நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்ப டையில் ஆக்கிர மிப்புகள் தான் காரணம் என்று உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.
எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கடைக்கா ரர்களும் அவரவர்கள் கடைக்கு முன்பு வைத்திருந்த ஆக்கிரமி ப்புகளை தானாக முன்வந்து அகற்றினர். இதனால் சாலை அகலமாக காட்சி அளிக்கிறது.






