மங்கலம்பேட்டை அருகே மோட்டர் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது
விபத்தில் பலியான விஜயகுமார்..
விபத்தில் பலியான விஜயகுமார்..
Published on

கடலூர்:

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

. இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com