என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே திருட்டு இரும்பு ஏற்றி வந்த டிரைவர் கைது: வாகனம் பறிமுதல்
    X

    சிதம்பரம் அருகே திருட்டு இரும்பு ஏற்றி வந்த டிரைவர் கைது: வாகனம் பறிமுதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார். அதில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருந்தது.
    • டிரைவர் மனோகரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகு மார் ஆலப்பாக்கம் செக் போஸ்ட் பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார். அதில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருந்தது. இது குறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் இந்த இரும்புகள் அனைத்தும் என்.ஓ.சி.எல். கம்பெனியில் திருடியது என போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கடலூர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்த டிரைவர் மனோகரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×