என் மலர்tooltip icon

    கடலூர்

    • அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.
    • விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் , அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.

    மேலும் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்களை இக்குழுவில் சேர்க்காமல் ஒரு சிலர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டபோது எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஒருவர் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ்அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. இவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவர் அதே ஊரில் வசிப்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக இதுவரை ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் வழங்கிய பின்பும், மீதம் ரூ.20 ஆயிரம் தரவேண்டுமென நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடன் கொடுத்தவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு வந்த போலீசார், சிவகுரு மற்றும் அவரது மனைவியை மிரட்டி பணம் கொடுக்க வலியுறுத்தினர். எனவே, கடன் கொடுத்த நபர் மீதும், வீட்டிற்கு வந்து மிரட்டிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவகுரு கூறினார். கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென தி.மு.க. பிரமுகர் சிவகுருவிற்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
    • கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஆடி மாத அமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    கடலூர்:

    மிகவும் பிரசித்தி பெற்ற திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (17-ந்தேதி)ஆடி மாதஅமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவாலங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி சேவை சாதித்தார் இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை 9 மணிக்கு உற்சவர் கண்ணாடி அறை சேவை , 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காக விளக்கேற்றி வழிபாடு செய்தனர் மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பட்டர் ராமன்தலைமையில் விழா குழுவினர், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.

    • மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
    • பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் நாளை (18 ந்தேதி) ஆய்வு கூட்டம் மற்றும் மீனவர்களிடையே உள்ள குறை கேட்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஏ.டி.ஜி.பி.சந்திப் மிட்டல் கலந்து கொண்டு ஆய்வு செய்து , மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.

    இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநி லத்திலிருந்து கடலோர காவல் படை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிராமத்தில் அதன் முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சினைகள், அவர்களுக்கான குறைகள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அதிகாரி கள் எடுத்துள்ள நட வடிக்கை களும் பொது மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வு நடை பெற உள்ளது.

    • கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

    கடலூர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர். பெண்கள் மனு அளிக்க அதிகளவில் வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கொளுத்தும் வெயிலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து பதிவு செய்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்குவதற்கு அலுவலக உள்ளே செல்லும் போது கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதற்கு நாற்காலி போடப்பட்டு அமரவைக்கப்பட்டனர். குறைதீர் முகாமிற்கு ஏராளமான பெண்கள் மனுக்களுடன் வந்ததால், கலெக்டர் அலுவலகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
    • மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.

    கடலூர்:

    இறந்த மூதாதையர்க ளுக்கு தர்ப்பணம் செய்வ தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தா லும், மாதம்தோறும் அமாவாசை யிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும். தர்ப்பணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்க ளுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

    இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம் . இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று ம் (திங்கட்கிழமை), வருகிற ஆகஸ்ட் மாதம் 16 -ந் தேதியும் அமாவாசை திதி வந்துள்ளது. இன்று வரக்கூடிய அமாவாசை திதியானது சூனிய திதியாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரக்கூடிய அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்து வைரலாகி வந்தது.

    இன்று காலைகடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மிக குறைந்த அளவில் பொது மக்கள் நேரில் வந்தனர். பின்னர் கடலில் நீராடி சூரியனை வணங்கி தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். ஆனால் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, கடலூர் தென்பெண்ணை ஆறு நதிக்கரையில் தங்கள் மூதா தையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி செல்வார்கள். இதன் காரணமாக மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். ஆனால் இன்று வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது.

    • திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.பூஜைகள் செய்து விட்டு கோவிலை பூட்டிய பூசாரி வழக்கம் போல வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவிலுக்குள் சென்று பார்த்த போது, கோபுரத்தில் 4 ஐம்பொன் கலசங்கள், நீர் மோட்டர் ஓயர், உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.பண்ருட்டி போலீசார் இந்த கொள்ளையர்க ளையும் விரைந்து பிடிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள 4 கலசங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஓப்படைக்க வேண்டுமென ஆன்மீகவாதிகள் எதிர் பார்க்கின்றனர்.

    • செந்தமிழ்செல்வன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலக்கண்ணன் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). சிதம்பரம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் செந்தமிழ்செல்வன் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த 15-ந்தேதி வயிற்று வலி அதிகமானதால் வலியில் அலறி துடித்தார்.

    இதனால் மன வேதனையில் இருந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் சகோதரர் நடராஜன் சிதம்பரம் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • லாரி திடீரென முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது.

    கடலூர்:

    ஆந்திராவில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வரை ஆன்மிக சுற்றுலா செல்ல 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சினை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த நரசிங்கப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவர் ஓட்டிவந்தார்.இந்த பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டம் கடமை நேந்தலை சேர்ந்த ஆரோக்கியசாமி (56) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த அணில் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் கண் எரிச்சலும், மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்பகுதியே புகை மண்ட லமாக மாறியது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வர வழைக்கப்பட்டனர். அவர்க ளுடன் சேர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு தீயணைப்பு படையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்தனர். சாலையில் இருந்த ஆசிட் சாலையோரம் ஓடியது. விபத்தில் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நீர்வளத்துறையின் வாயிலாக நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட பெருமாள் ஏரியின் இயல்பான கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது, தற்போது தூர் வாரும் பணியின் மூலம்; சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது, அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு 723.27 மில்லியன் கன அடியாக உயரும், இதனை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நீர் வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி வட்டத்தில் கீழ்பரவனாறு தொலைக்கல் 7 கி.மீ வரையிலான விரிவான வெள்ளத்தடுப்பு பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் வாயிலாக நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்அனுவம்பட்டு-கோவிலாம்பூண்டி சாலை மேம்படுத்தும் பணி, அம்புபூட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்துதல் பணிகளையும் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையான பிச்சாவரத்தில் உள்ள தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் காட்டேஜ் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவது குறித்தும் ஆய்வு செய்தார். சிதம்பரம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் வெளிவட்ட இருபுற மாற்றுத் தார்சாலை அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்படடுள்ளதை பார்வையிட்டார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய செயல்பாடுகளை பார்வையிட்டதோடு பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன், துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரந்தாமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உடனிருந்தனர்.

    • வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
    • ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை, சாத்தான்குப்பம், கீரப் பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளை யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக் கான ரூபாய்கள் பயிரிடப் பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப் பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதி களில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜன வரி மாதம் வரை வாழைத் தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறு வடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லா மல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1100 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தநிலையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூவன்பழம் ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் விலை அனைத்தும் 2 மடங்காக உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் வாழைப் பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலை யில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×