என் மலர்
கடலூர்
- ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதியில் சாலை வசதி , குடிநீர் வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.
இன்று காலைகடலூர் மாநகராட்சி 8-வது வார்டில் ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், மண்டல குழு தலைவர் சங்கீதா, பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
கடலூர்:
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1. 11.1956 -ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது. இந்த நிலையில் ஜூலை 18- ம் நாள் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை இன்று( 18 ந்தேதி) முதல் வருகிற 23- ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல்கலெக்டர் மதுபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின் கேபிள் செல்லும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- உயர் மின் கம்பி பஸ்சில் படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து முட்லூருக்கு தனியார் மினி பஸ் சென்றது. இதனை டிரைவர் ரியாத்துல்லா (24 )ர் ஓட்டி சென்றார். லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் அருகே அதிவேகமாக சென்றபோது அங்கு இருந்த வேகத்தடையை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால்பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின் கேபிள் செல்லும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மின் கம்பத்தை உடைத்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பஸ் நின்றது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் உயர் மின் கம்பி பஸ்சில் படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்._
- குள்ளஞ்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியிலிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் தனது தாயை ஒருவர் அடிப்பதாக புகார் செய்தார். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். அப்போது ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது. ஆனந்தன் சகோதரர் கலையரசன் குடிபோதையில் இருந்தார். இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் , கலையரசனை காலையில் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து விட்டு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த கலையரசன் மோட்டார் சைக்கிளில் சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை பணி செய்ய விடாமல் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர்.
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தர படி க்ரைம் டீம் எஸ்.ஐகுண சேகரன் தலை மையி லான போலீ சார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் இஸ்மா யில் (வயது 54) என்பவர் லாட்டரிசீட் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவரை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத் தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
- ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
- துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பான 134 மனுக்க ளும், ஆக்கிரமிப்பு தொடர் பாக29 மனுக்களும்இ முதி யோர் உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 37 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 17 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறை களுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர் களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
- ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்று அதன் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து, தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர், மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியோர், அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள், ஒரு சித்த மருத்துவர், ஒரு பல்நோக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணி புரிகின்றனர். காலை 7.30 மணிக்கு வரவேண்டிய மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. இதனால், தினந்தோறும் இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருத்துவ சீட்டு வாங்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இதனால், இன்று காலை சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் திடீரென மருத்துவமனை முன்பு, கையில் மருத்துவ சீட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்ளி ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ராம்குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன், நகர தலைவர் கதிர்காமன், அலிபாபு உட்பட சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர்.
- சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது.
கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், ஆட்டோ பாஸ்கர், இளங்கோவன் மற்றும் பலர் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வடலூர் அருகே கருங்குழி-கொளக்குடி செல்லும் வழியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் செய்யவிடாமல் தடுத்து விட்டனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது. ஆகையால் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
- ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. முதல்முறையாக செல்லியம்மனுக்கு 108 பால்குட வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை பெண்கள், ஓடைப்பகுதியில் இருந்து சக்தி கரகத்தின் பின்னால் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்று 108 பால்குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலால் செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
- பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது
- இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கடலூர்:
கடலூர் கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செய லாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலை மையில் வடலூரில் நடை பெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், காசிராஜன், நாராயண சாமி, சுப்ரமணி யன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செய லாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், சலீம், இளைய ராஜா, நகர செய லாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், நகராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்புராயலு, பேரூராட்சித் தலைவர் குறிஞ்சிப்பாடி கோகிலா குமார், துணைத்தலைவர் ராமர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் தலைமைமையில் நடை பெறும் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகு திகளின் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வருகிற 1.1.2024 தகுதி யேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.07.2023 வெள்ளி முதல் 21.08.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- அதிகாலை கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்து செல்ல உள்ளனர்
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 32). இவர் அங்குள்ள மளிகை கடையில் வேலைப் பார்த்து வந்தார். மேலும் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடிவந்தனர். அவரை பிடிக்க கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து செயல்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்துக்கு வந்த நெல்லை போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் தேடினார்கள். அப்போது ஜெயக்குமார் கீரப்பாளையத்தில் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரை நெல்லைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
- 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் யாரிடமும் உதவி கேட்காமல் வங்கி கடன் மூலமாக தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கடன் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் இருந்து வருகிேறாம். கடந்த 2014 - 15-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் மூலமாக கடன் இல்லாத தொகையாக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பல மாற்றத்தினாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து வருகின்றோம். ஆகையால் வங்கிகளில் சிறப்பு நிதி திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து மாற்றத்தினைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.






