என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே தனியார் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள்
    X

    புதுப்பேட்டையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பஸ்சில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி அருகே தனியார் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள்

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
    • டிரைவர் கண்டு கொள்ளாமல் வேகமாக பஸ்சை ஓட்டி சென்றார்.

    கடலூர்:

    கடலூர் - விழுப்புரம் சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தனியார் பஸ் வேக மாக செல்லும்போது நேருக்குநேர் மோதி கொண்டதில் 6 பேர் இறந்தனர். இதன் பின் னர் தனியார் பஸ், கண்டக்டர் ஆகியோர்களுக்குகாவல்துறை,வட்டார போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து விதி முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. மித மான வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

    இந்நிலையில் பண்ருட்டி யிலிருந்து புறப்பட்டு மேல்மலையனூருக்குபுதுப் பேட்டை, ஓறையூர் வழியாக சென்ற தனியார் பஸ் ஒன்றில் போக்குவரத்து விதிமுறை களை மீறி பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் வகையில் பஸ் படிக்கெட்டில் தொங்கிய படியும், சிலர் பின்னாடி தொங்கியபடியும் பயணம் செய்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் எச்சரிக்கை செய்தும் டிரைவர் கண்டு கொள்ளாமல் வேக மாக பஸ்சை ஓட்டி சென்றார். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டையில் அந்த வழியாக செல்லும் பஸ்களில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×