search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk chute procession"

    • திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    • ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. முதல்முறையாக செல்லியம்மனுக்கு 108 பால்குட வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை பெண்கள், ஓடைப்பகுதியில் இருந்து சக்தி கரகத்தின் பின்னால் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்று 108 பால்குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலால் செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
    • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று பக்தர்கள் 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடி வாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று, மலைக்குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது.

    மலை அடிவாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்து. வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட் டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இரவு சுமார் 7 மணி அளவில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆறுமுகசாமிக்கு விபூதி காப்பு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய நாயகி உடனுரை ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி 9ம் ஆண்டு பால்குடம் ஆரணி டவுன் பழைய காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ அரியாத்தமன் ஆலயத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பால்குடம் ஏந்தி காந்தி ரோடு பழைய பஸ் நிலையம் பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வர் ஆலயத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

    இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆலய நிர்வாகி நடராஜன், மற்றும பக்தர்கள் பங்கேற்றனர்.

    • பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
    • பிரம்மோற்சவ விழா நடந்தது

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காமராஜர் நகர், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று 10-ம் நாள் திருவிழா முன்னிட்டு 2000 பெண் பக்தர்கள் ஞான முருகன் பூண்டி, முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் ஊர்வலத்தின் போது அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இரவு 7 மணி அளவில் சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவதற்காக, காப்பு கட்டி, விரதம் இருந்து, ஞான முருகன் பூண்டி, முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தீச்சட்டி ஏந்தியும், அங்காளம்மன் வேடம் தரித்தும், கிரகம் சுமந்த படியும், ஓம் சக்தி, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

    இவ்விழாவைக் காண செய்யாறு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாக விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். செய்யார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையின் கீழ் விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 13-ம் ஆண்டு திருவிழா நடந்தது
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது.

    இங்கு 13-ம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது.

    பால்குட ஊர்வலத்தில் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் சேலையில் பங்கேற்றனர். விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றடைந்தது.

    இதில் பல பெண் பக்தர்கள் திடீரென அருள் வந்து ஆடினர். அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு நேர்த்திகடன்

    • சிறப்பு பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ தேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டாக 6ஆம் வெள்ளி முன்னிட்டு 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

    பால் குட ஊர்வலத்தை முன்னிட்டு காமாட்சியம்மன் பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 1008 பால் குடங்கள் ஏந்திய பெண்கள் ஊர்வலம் புறப்பட்டு நெல்லூர் பேட்டை ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோவிலை அடைந்தது.

    முன்னதாக 1008 பால்குடம் ஊர்வலத்தை நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆடி 3-ம் வெள்ளியையொட்டி நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடி 3-ம் வெள்ளி முன்னிட்டு பால் கூட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

    கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ படவேட்டமனுக்கு பக்தர்கள் காப்பு கட்டி இன்று பாலாற்றங்கரையிலிருந்து கரகம் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், தொப்பை செட்டி தெரு, வாலாஜா எம்பிடி ரோடு வழியாக கச்சால நாயக்கர் தெரு வந்து கீழ்பட வேட்டம்மன் ஆலயத்திற்கு வந்து அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

    பின்னர் மாலை 4 மணியளவில் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும். நிகழ்ச்சியினை நாட்டாமைத்தாளர்கள், ஜூரிகள், பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

    ×