என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கம்பத்தில் மோதிய பஸ் பள்ளத்தில் இறங்கி நிற்கும் காட்சி.
சிதம்பரம் அருகே அதி வேகமாக வந்த மினி பஸ் மின் கம்பத்தில் மோதியது
- பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின் கேபிள் செல்லும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- உயர் மின் கம்பி பஸ்சில் படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து முட்லூருக்கு தனியார் மினி பஸ் சென்றது. இதனை டிரைவர் ரியாத்துல்லா (24 )ர் ஓட்டி சென்றார். லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் அருகே அதிவேகமாக சென்றபோது அங்கு இருந்த வேகத்தடையை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால்பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின் கேபிள் செல்லும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மின் கம்பத்தை உடைத்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பஸ் நின்றது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் உயர் மின் கம்பி பஸ்சில் படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்._






