என் மலர்
கோயம்புத்தூர்
- டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
- கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் டிரைவரான முபாரக்(வயது27) என்பவர் மாணவியை அவரது வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்து தனது மகளின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கதவை தள்ளி உள்ளே சென்ற போது வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு தர்மஅடி கொடுத்து ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
- சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.
கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் 25 க்கும் மேற்படட் அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.
இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பட உள்ளது.
சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும்.
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.
- மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார் தாசில்தார்.
கோவை,
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.
இருந்தபோதிலும் மற்ற பகுதிகளில் அந்த வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசமும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
விமான நிலைய நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தார் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்து , மீட்டர்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே காலி செய்து விடுவோம்.
திடீரென்று மின்சாரத்தை துண்டித்ததால் தற்சமயம் கோடை காலம் என்பதால் எங்களால் குடி இருக்க முடியவில்லை. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்.இது குறித்து தனி தாசில்தார் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் அளித்திருந்தோம். அதன் பிறகும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்ட ரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார்.
- கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
- சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
வடவள்ளி,
கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.
கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.
இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதா னியங்களை கண்டுபி டிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பபட உள்ளது.
சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துறை, தென்சங்கம் பாளையம், ஆனைமலை ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா ஆகியவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரடியாக பெற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியாஆனந்த், உதவி இயக்குநர் (நிலஅளவை) கோபாலகிருஷ்ணன், ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (24-ந்தேதி) ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பாரம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது, ஆகிய ஊராட்சிகளுக்கும், வருகிற 25-ந்தேதி சமத்தூர், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, நல்லூர், தொண்டாமுத்தூர், கம்பா லப்பட்டி, கரியாஞ் செட்டிபாளையம், கோட்டூர், அங்காலக்குறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும் வருவாய் தீர்வாயம் நடக்க உள்ளது.
- கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், முளைப்பாரியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெற்றது.
நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடை பெற்றது. நேற்று காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜைகள், 6:15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்ைசயாக நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜைகள், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே கும்பாபிஷேக நாளான இன்றுவரை அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துச மய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் மருத்துவக்குழுவினர், காவல்துறை, தீயணைப்புதுறை என அனைவரும் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கிராமப்புற பள்ளி மாணவர்களின் திறமைகளும், வெளிச்சத்திற்கு வருவதோடு, அங்கீகாரம் கிடைக்கிறது.
- இதில், பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், உடனடியாக பதிவேற்றப்படும்.
கோவை,
கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை பதிவேற்ற, பிரத்யேக சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், ஆசிரியர்களின் திறமைகள், கலைத் திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை, 'தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை' என்ற பெயரில், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ஆகியவற்றில் பதிவேற்றப்படுகிறது.
இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்களின் திறமைகளும், வெளிச்சத்திற்கு வருவதோடு, அங்கீகாரம் கிடைக்கிறது. இதை கோவை மாவட்டத்திலும் மேற்கொள்ளும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு, மேடை ஏற்படுத்தி தர, கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டரில் பிரத்யேக ஐ.டி., உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கலைதிருவிழா, வினாடி-வினா, சிறார் திரைப்பட போட்டி, வானவில் மன்ற போட்டிகள் நடத்தி, மாநில அளவில் தகுதிபெறுவோர், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுபோன்ற திறமையான மாணவர்கள், ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், அரசுப்பள்ளிகள் மீதான கவனத்தை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், உடனடியாக பதிவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சாலமன் பாரிஸ் தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
- இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை கருப்பராயன் கோவில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சாலமன் பாரிஸ்(27). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). ஒர்க் ஷாப் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை-சத்தி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றார்.
ெமாபட்டை வணிக வளாகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறி்த்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிங்காநல்லூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறை இயங்கி வருகிறது.
- அனைத்து சிறைக்கைதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
கோவை,
கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் சிங்காநல்லூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறை இயங்கி வருகிறது.
இங்கு அனுமதிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும், அதன்மூலம் வருவாய் ஈட்டவும் விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ெலண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளும் செய்து வருகின்றனர்.
காவல்துறை இயக்குனர் மற்றும் சிறைகள், சீர்த்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்ைத முன்னிட்டு சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை தேனீ பண்ணை சார்பில் தேனி வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு, சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், விற்பனை முறைகளையும் சிறைக்கைதிகள் விடுதலைக்கு பிறகு அதனை ஒரு தொழிலாக செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து சிறைக்கைதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே வனப்பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் இன்று காலை 4.30 மணிக்கு முதல் 6 மணி வரை கோவிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு கோவிலை சுற்றி புனித நீர் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரத்தின விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார். கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- சரவணன் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.
- இது குறித்து சரவணன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது30). கூலித்தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருந்தனர். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 14 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளைடித்து தப்பிச் சென்றார்.
போதை தெளிந்து எழுந்த சரவணன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
- கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






