search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலையம் விரிவாக்க பணி: கோவையில் காலி செய்யாத வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    விமான நிலையம் விரிவாக்க பணி: கோவையில் காலி செய்யாத வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

    • சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார் தாசில்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.

    இருந்தபோதிலும் மற்ற பகுதிகளில் அந்த வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசமும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

    விமான நிலைய நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தார் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்து , மீட்டர்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே காலி செய்து விடுவோம்.

    திடீரென்று மின்சாரத்தை துண்டித்ததால் தற்சமயம் கோடை காலம் என்பதால் எங்களால் குடி இருக்க முடியவில்லை. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்.இது குறித்து தனி தாசில்தார் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் அளித்திருந்தோம். அதன் பிறகும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்ட ரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார்.

    Next Story
    ×