கோவையில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

சரவணன் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார். இது குறித்து சரவணன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
கோவையில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்
Published on

கோவை,

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது30). கூலித்தொழிலாளி.

சம்பவத்தன்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருந்தனர். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார்.

சம்பவத்தன்று இரவு இவர் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 14 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளைடித்து தப்பிச் சென்றார்.

போதை தெளிந்து எழுந்த சரவணன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com