என் மலர்
கோயம்புத்தூர்
- ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த 30 வயது இளம்பெண் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்
- கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். சத்துணவு ஊழியர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு ராக்கிப்பா ளையத்தை சேர்ந்த வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்ப ட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது . கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம்பெண் தனது மகன், மகள் ஆகியோரை பள்ளியில் விட செல்வதாக கணவரிடம் கூறி விட்டு மொபட்டை எடுத்து சென்றார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். 2 குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் இளம்பெண்ணின் கணவர் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ்நிலையத்தில் தன்னை தனியாக தவிக்க விட்டு 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தரும்படி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
- ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர்.
குனியமுத்தூர்,
கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 47). கால் டாக்சி டிரைவர். சம்பவத்தன்று இவர் மூலக்கடை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் ராஜூவை தடுத்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி பணம் கொடுக்கும்படி மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ராஜூவின் பாக்கெட்டில் இருந்த ரூ. 3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் மதன்குமார் என்ற மில்கி (25), காமராஜர்புரத்தை சேர்ந்த மூவேந்திரன் (25) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டி ல் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கோவையில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர்.
- 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து பெரிய நாயக்கன் பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கே. கவுண்டன்பாளையம் ஸ்ரீபாரதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
- கார், வேன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூரில் பரபரப்பு மிகுந்த பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள வாரச்சந்தை பகுதியில் குற்ற வழக்குடன் தொடர்பு உடைய டூவிலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அங்கு வாரச்சந்தை இன்று காலை தொடங்குவதாக இருந்தது. எனவே வியாபாரிகள் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர்.இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் முன்பகுதியில் இருந்து குபுகுபுவென கரும்புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.இதுகுறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- ஸ்ரீ சுப்பிரமணியம் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள சிட்கோ எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுப்பிரமணியம் (வயது 50). ஐ.டி. ஊழியர். இவர் தனது வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் மரங்களை பார்த்து வீட்டு தூங்க சென்றார். நள்ளிரவு வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்த மர்மந பர்கள் ஸ்ரீ சுப்பிரமணியம் வளர்த்த ஒரு சந்தன மரத்தை வெட்டி 10 அடி துண்டை மட்டும் கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் இதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து ஸ்ரீசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்தனர்.
- 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.
கோவை,
கோவை சோமனூர் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குல்ஷான் அகமது (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சிறுமி வாலிபருடனான காதலை தொடர்ந்து வந்தார். மேலும் குல்ஷான் அகமதுவிடம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் தகவலையும் தெரிவித்தார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 27-ந் தேதி குல்ஷான் அகமது, சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை சாமளாபுரம் அருகே உள்ள வாழைத்ேதாட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து குல்ஷான் அகமது சிறுமியை திருமணம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் சிறுமியை சென்னை க்கு அழைத்து சென்றார். அங்குள்ள நண்பரின் அறையில் வைத்து குல்ஷான் அகமது சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து அவரது பெற்றோர் கரும த்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் குல்ஷான் அகமதுவை தொடர்பு கொண்டு சிறுமி யை அழைத்து வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் சிறுமியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவரை குல்ஷான் அகமது திருமணம் செய்து பாலியல் பலாத்கா ரம் செய்தது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குல்ஷான் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பந்து தாக்கியதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளியங்கிரி அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்ப ட்டார்.
சூலூர்
சூலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 42). இவர் தென்னம்பாளை யத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வெள்ளியங்கிரி நேற்று காலை தென்னம்பாளையம் மைதானத்தில் நண்பர்களு டன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் பந்து வீச வந்தார். இந்த நிலையில் வெள்ளி யங்கிரி திடீரென மைதா னத்தில் சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு கை, கால்கள் இழுத்துக்கொ ண்டன. இதைப் பார்த்த நண்பர்கள் ஓடோடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலு தவி செய்தனர்.
அதன்பிறகு வெள்ளியங்கிரி அருகிலுள்ள மரு த்துவமனைக்கு உடனடி யாக கொண்டு செல்லப்ப ட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெள்ளி யங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றிய தகவல் அறி ந்ததும் சூலூர் போலீசார் வழக்கு ப்பதிவுசெய்து வெள்ளிங்கிரி உடலை மீட்டு உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.
சூலூர் தென்னம்பா ளையம் கிரிக்கெட் மைதா னத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வெள்ளிங்கிரிக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் உடல் நலக் கோளாறு காரணமாக இறந்தாரா, அல்லது கிரிக்கெட் விளையாடும் போது ஏதேனும் பந்து அல்லது கிரிக்கெட் மட்டை தவறுதலாக பட்டு அதனால் இறந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூலூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி மைதானத்தில் உயிரிழக்கும் 2-வது நபர் வெள்ளியங்கிரி ஆவார். சித்தநாயக்கன் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய 32 வயது பளு தூக்கும் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
- கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கோவை:
கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.
கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.
எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
- பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
- கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
வால்பாறை:
கோவை ஆழியாறு அடுத்த வில்லோணி வனப்பகுதியில் கவியருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சோத்துப்பாறை ஆற்றில் பெரியஅளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கடந்த 6 மாதங்களாக கவியருவி வறண்டு காணப்பட்டது.
கோவையில் தற்போது பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. எனவே கவியருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. எனவே சுற்றுலாப்பயணிகள் திரளாக வந்திருந்து, கவியருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கவியருவில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு கம்பியையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
எனவே வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக கவியருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து உள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
இதற்கிடையே கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப்பயணிகள் நேற்று குளிப்பதற்காக கவியருவிக்கு சென்றிருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.
எனவே சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு வனத்துறையினர் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு குளிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை கவியருவில் குளிப்பதற்காக வனத்துறையின் தடை, 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையளவு குறையவில்லை. கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவியருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.
- கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது.
- தக்காளி ரூ.120க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் விற்பனை
கோவை,
கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 5 பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு அவை ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
இருந்தபோதிலும் பண்ணைப்பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை விரைவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போதும் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோவையில் தக்காளி விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்க, மற்றொரு புறம் மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிலோ விவரம் (ரூபாயில்):
வெண்டைக்காய்-60, பீர்க்கங்காய்-40, உருளைக்கிழங்கு-30, பாகற்காய்-40, புடலங்காய்-40, வாழைக்காய்-40, சுரைக்காய்-40, பூசணிக்காய்-30, முருங்கைக்காய்-60, அவரைக்காய்-100, பீன்ஸ்-130, கத்தரிக்காய்-60, கேரட்-80, எலுமிச்சை-80, சவ்சவ்-30, சின்னவெங்காயம்-120, பெரிய வெங்காயம் (3 கிலோ)-100, பீட்ரூட்-60.
இதுகுறித்து கோவை டி.கே.காய்கறி மார்க்கெட் வியாபாரி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், கோவையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே மார்க்கெட்டுக்கு போதிய காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அவற்றின் விலை அதிகரித்து உள்ளது. கோவை மார்க்கெட்டுக்கு சரக்கு லாரிகளின் வரத்து அதிகரிக்கும்போது, காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.
- அஜய்த்துல்லா என்பவரிடமிருந்து 260 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர்.
- தங்க நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விகேஷ் ஜெயின்(வயது41). தங்க நகை வியாபாரி.
இவர் கோவை வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தேன். பின்னர் சொக்கம்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோவையில் உள்ள நகை பட்டறையில் தங்கத்தை கொடுத்து அதனை ஆபரணமாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார்(39) என்பவர் இடையர் வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.
அவருடன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஜய் துல்லா(20) என்பவர் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அவர்களிடம் கடந்த 3ஆண்டுகளாக தங்கத்தை கொடுத்து அதனை ஆபரணங்களாக மாற்றி மும்பைக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தேன்.
கடந்த ஏப்ரல் 1ந் தேதி நான் மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து 11 கிலோ 473 கிராம் தங்கத்தை பெற்று அதனை சேக் சலாம் அலி ஜமேதார் மற்றும் அஜயத்துல்லா ஆகியோரிடம் ஆபரணங்களாக மாற்றி தரும்படி கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் 541 கிராம் தங்கத்துக்கு மட்டும் ஆபரணங்களை செய்து கொடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ரூ.5 கோடி மதிப்பிலான 10 கிலோ 340 கிராம் தங்கத்துடன் தலைமறைவாகிவிட்டனர்.
எனவே அவர்களை கண்டுபிடித்து தங்கத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி தங்க நகை தொழிலாளி அஜய்த்துல்லா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 260 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர். தங்க நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 4 பேரிடமிருந்து 13 பவுன் தங்கச்சங்கிலி, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் செயின் பறிப்பு உள்ளிட்டவை நடந்து வந்தது.
இதனால் மக்கள் வெளியில் தனியாக வரவே அச்சப்பட்டனர். தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு அதில் உள்ள காட்சிகளை கைப்பற்றி பார்த்தனர்.
அப்போது அதில் 4 பேர் கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அவர்களை பல்வேறு கோணங்களில் விசாரித்து தேடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்து அதன் மூலம் தேடினர்.
அப்போது அந்த போட்டோக்களில் இருந்த 4 பேரின் உருவம், சி.சி.டி.வி.காமிராவில் பார்த்த உருவத்துடன் ஒத்துப்போனது. இதனை வைத்து விசாரித்த போது, அவர்கள் பவானிசாகர், பழையம்பள்ளியை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது20), ஈரோடு நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி விஜயராஜன்(19), பவானிசாகர், குரும்பபாளையம் பச்சை என்ற ஸ்ரீகாந்த்(20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எங்கிருக்கின்றனர் என தேடிய போது, அந்த கும்பல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில், இவர்கள் மீது ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
4 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், வெளியில் வந்த உடனேயே தங்களது கைவரிசையை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் தங்கள் மீது ஈரோட்டில் வழக்குகள் இருப்பதால் கோவைக்கு சென்று வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 4 பேரும் கோவை வந்து வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 பவுன் தங்கச்சங்கிலி, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






