search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காய்கறிகள் விலை உயர்வு
    X

    கோவையில் காய்கறிகள் விலை உயர்வு

    • கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது.
    • தக்காளி ரூ.120க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் விற்பனை

    கோவை,

    கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 5 பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு அவை ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

    இருந்தபோதிலும் பண்ணைப்பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை விரைவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போதும் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் தக்காளி விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்க, மற்றொரு புறம் மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

    கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிலோ விவரம் (ரூபாயில்):

    வெண்டைக்காய்-60, பீர்க்கங்காய்-40, உருளைக்கிழங்கு-30, பாகற்காய்-40, புடலங்காய்-40, வாழைக்காய்-40, சுரைக்காய்-40, பூசணிக்காய்-30, முருங்கைக்காய்-60, அவரைக்காய்-100, பீன்ஸ்-130, கத்தரிக்காய்-60, கேரட்-80, எலுமிச்சை-80, சவ்சவ்-30, சின்னவெங்காயம்-120, பெரிய வெங்காயம் (3 கிலோ)-100, பீட்ரூட்-60.

    இதுகுறித்து கோவை டி.கே.காய்கறி மார்க்கெட் வியாபாரி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், கோவையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே மார்க்கெட்டுக்கு போதிய காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அவற்றின் விலை அதிகரித்து உள்ளது. கோவை மார்க்கெட்டுக்கு சரக்கு லாரிகளின் வரத்து அதிகரிக்கும்போது, காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.

    Next Story
    ×