என் மலர்
உள்ளூர் செய்திகள்

துடியலூர் அருகே தீப்பிடித்து எரிந்து கார்
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
- கார், வேன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூரில் பரபரப்பு மிகுந்த பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள வாரச்சந்தை பகுதியில் குற்ற வழக்குடன் தொடர்பு உடைய டூவிலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அங்கு வாரச்சந்தை இன்று காலை தொடங்குவதாக இருந்தது. எனவே வியாபாரிகள் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர்.இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் முன்பகுதியில் இருந்து குபுகுபுவென கரும்புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.இதுகுறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.






