என் மலர்
கோயம்புத்தூர்
- கலெக்டரிடம் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
- கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தரவும் கலெக்டரிடம் வலியுறுத்தல்
கோவை,
கோவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காயிதேமில்லத் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை அரசு பதிவேட்டில் பதிவாகவில்லை. எனவே அந்த பட்டாக்களை உடனடியாக பதிவேட்டில் இடம்பெற செய்யவேண்டும்.
ஆத்துப்பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க் கால் அமைக்கப்படுகிறது. அவை ஒரு சில இடங்களில் தாழ்வாகவும், உயரமாகவும் உள்ளது. இதனால் காயிதே மில்லத் காலனியில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.
மேலும் காயிதேமில்லத் காலனிக்குள் செல்வதற்கான சரிவுதளத்தை சரியாக அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் இருந்து காயிதேமில்லத் காலனிக்கு இறங்குதளம் நேரடியாக வருவதால், அங்கு வசிக்கு மக்கள் அடுத்த சாலைக்கு செல்ல, சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டி உள்ளது.
இதனால் அவசர காலத்தில் கோவைக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இறங்கும் தளத்தில் கீழ்ப்பாதை அமைத்து, அந்த வழியாக ஆம்புலன்ஸ், பள்ளிகுழந் தைகள் அடுத்த சாலைக்கு செல்வதற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி 99-வது வார்டு, சித்தன்னபு ரம் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்ப ட்டன. எனவே அவர்கள் வீடுஇன்றி சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே கோரிக்கை மனு தரப்பட்டு உள்ளது. அப்போது கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தருவதாக கலெக்டர் கூறியிருந்தார்.
ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக மாற்றுவீடு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது எச்.எஸ்.ஹீலர், கோவை ஜலீம், எம்.எச்.அப்பாஸ், அக்பர்கான், இப்ராஹிம், குட்டி, கோட்டைசேட், முஹம்மது, காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
- குடிபோதையில் இருந்தவர் தாக்கியதால் 2 பற்கள் உடைந்தது
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வடக்கு சாமிசெட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 62). ஆட்டோ டிரைவர்.
இவரும் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அர்ஜூன் (37) என்பவரும் வண்ணான்கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்த நிலையில் அர்ஜூனின் நடவடிக்கைகள் செல்வராஜூக்கு பிடிக்காததால் கடந்த 2 மாதங்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதன்காரணமாக அர்ஜூனுக்கு செல்வராஜ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர் செல்வராஜின் முகத்தில் குத்தினார்.
அப்போது அவரது 2 பற்கள் உடைந்து விழுந்தது. இதனை பார்த்த செல்வராஜின் மனைவி தடுக்க சென்றார். அவரையும் அர்ஜூன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.
இது குறித்து செல்வராஜ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அர்ஜூனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானை உள்ளிட்ட விலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெருகின்றன
- நவமலை, ஆழியார் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வறட்சியாக இருந்தது.
இதன் காரணமாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இன்றி காணப்பட்டது.அதன்பின், தென்மேற்கு பருவமழையானது, ஜூன் மாதம் இறுதியில் பெய்ய துவங்கியது. இந்த மழை தொடர்ந்து ஒரு மாதமே நீடித்தது. இருப்பினும், பொள்ளாச்சியை அடுத்த பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை வனப்பகுதியில் உள்ள அருவி, நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென் றது. ஆங்காங்கே மலை முகடு களில் இருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது டன், ஆங்காங்கே புதிதாக சிற்றருவிகள் உருவானது. மேலும், வனப்பகுதி பச்சை பசேல் என காணப்பட்டது.
ஆனால், தென்மேற்கு பருவமழை போதியளவு இல்லாமல் ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதி கரிக்க துவங்கியது. இந்த நிலை தற்போதும் நீடித்துள்ளது. வால்பாறை, ேசாலையார், பரம்பிக்குளம் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்தி ருந்தாலும், ஆழியார், நவ மலை, சர்க்கார்பதி, காடாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி போனது. அதிலும், கடந்த சில வாரமாக வெயிலின் தாக் கம் கடுமையாக இருந்தது.
இதனால், இப்பகுதி வனத்தில் உள்ள நீரோடைகளிலும், சிற்றருவியிலும் தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோனது. எப்போதும் தண்ணீர் ஓரளவு வரத்து இருக்கும் நவமலை உள்ளிட்ட நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் பாறைகள் மட்டுமே தென்படுகிறது. வனத்திற்குள் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால், அடர்ந்த வனத்திலிருந்த யானை உள்ளிட்ட விலங்குகள், நீர் நிலையை தேடி இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. அதிலும், நவமலை, ஆழியார் பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் யானையின் நடமாட்டம் உள்ளது. இதனால், சுற்றுலா வரும் பயணிகளுக்கு, வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் முக்கிய தகவல்
- கிணத்துக்கடவில் நிறுத்தம் வேண்டும் என போராடிய ரெயில் பயணிகள் கோரிக்கை நிறைவேறியது
பொள்ளாச்சி,
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
செப்டம்பர் 25-ந் தேதி வரை ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் புறப்ப டும் ரெயில், திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து புறப்ப டும் ரெயில் செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றட யும்.
வழியில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கிளக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலியில் புறப்படும் ரெயில், பொள்ளாச்சிக்கு காலை 4.45 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 5.09 மணிக்கும் வரும். மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரெயில் கிணத்துகடவுக்கு இரவு 9.17 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.03 மணிக்கும் வந்தடையும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, இந்த ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.
கிணத்துக்கடவில் நிறுத்தம் செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது கிணத்துக்கடவில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய 2 நாட்களில் நேரடியாக செலுத்தலாம்
- கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல்
கோவை,
பொதுமக்கள் மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து சொத்து வரிகளின் நிலுவை களை செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் நாளை (23-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24-ந் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
2023-2024ம் நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டு வரும் 30-ந் தேதி நிறைவடைய உள்ளது.
ஆகையால் வரும் அக்டோபர் 1ந் தேதிக்கு மேல் செலுத்தப்படும் முதலாம் அரையாண்டு க்குரிய சொத்து வரியுடன் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 1 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
எனவே பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை என அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய இரண்டு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.
அதன்படி, கிழக்கு மண்டலம்-56 மற்றும் 57-வது வார்டு பகுதிகளுக்கு ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி சங்கம் மைதா னத்திலும், மேற்கு மண்டலம் 38 வார்டு பொம்மானாம்பா ளையம் புவனேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும், 73-வது வார்டு பொன்னைய ராஜபுரம் வார்டு அலுவலகத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
அதே போல தெற்கு மண்டலம் 88ம் வார்டு தர்மராஜா கோவில் வளாகம், 96-வது வார்டு குறிச்சி மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
வடக்கு மண்டலம் 11-வது வார்டு ஜனதா நகர் சூர்யா கார்டன் பகுதியிலும், 19-வது வார்டு மணிகா ரம்பாளையம் அம்மா உணவகத்தில் நடைபெற வுள்ளது.
மத்திய மண்டலத்தில் 33-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணசாமி வீதி, 62-வது வார்டு சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது ஆண்டு பெருமாள் கோவில் வீதி, 80-வது வார்டு கேம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் உட்பட மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழக்கம் போல செயல்படும். ஆகையால் இந்த வசதி யினை முழுமையாக பயன்படுத்தி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு முதலாம் அரையாண்டு வரையிலான நிலுவைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகள் கூறி அபகரித்தனர்
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண்.
சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.
அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்ப தாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனையடுத்து அந்த பெண் அதில் சேருவ தற்காக அந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
அப்போது எதிர்முனை யில் பேசிய நபர் தனது பெயர் ஈஸ்வரன் என்றும், தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் தெரி வித்தார்.
மேலும் அவர் தங்களது நிறுவனத்தின் யூ-டியூப் சேனலை நீங்கள் சப்ஸ்கி ரைப் செய்து, ரிவ்யூ கொடுத்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என அந்த பெண் நம்பினார். அந்த நபர் கூறிய அனைத்தையும் செய்தார். அதற்காக அவருக்கு சிறிய அளவில் கமிஷன் தொகை கிடைத்தது.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு டெலிகிராம் மூலமாக சுஜாதா அகர்வால் என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, கிரிப்டோகரன்சியில் முத லீடு செய்தால் உங்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும் என தெரி வித்தார்.மேலும் இணையத ளத்தில் லிங்க் அனுப்பி கிரிப்டோ கரன்சியில் எவ்வாறு முதலீடு செய்வது என விவரங்களை கூறி னார்.
இதனைத்தொடர்ந்து அந்த பெண் ரூ.2,100 முதலீடு செய்தார். அதற்காக அவருக்கு லாபத்துடன் சேர்ந்து ரூ.3100 அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
முதலில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கு களில் ரூ.11.40 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு பணம் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சம்பவம் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர்
- ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறை சேர்ந்தவர் அன்பில். டிரைவர்.
இவரது மகன் ஜீவன் ராஜா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ஜீவன்ராஜா கடந்த ஒரு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை யடுத்து அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் வாங்கினர்.
பின்னர் அவரை சோலையாறு அணை பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு இருந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜீவன்ராஜா திடீ ரென எலி மருந்தை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி யடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ஜீவன் ராஜாவை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவ ருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜீவன் ராஜா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முழு சோதனை ஓட்டம் நடத்தி ஒத்திகை பார்க்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டம்
- கோவையில் நவ.1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகிக்க ஆயத்தம்
கோவை,
கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகள் முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரி வாக்க பகுதிகளுக்கு கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, 11 ேகாடி லிட்டர் வரை வழங்கப்படுகிறது. சிறுவாணியில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் பில் லூர் அணையே கோவைக்கு கைகொடுக்கிறது.
இந்நிலையில், வரும் 2040ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பில்லூர்-3 குடிநீர் திட்டம் ரூ.779 கோடி மதிப்பீட்டில் செயல்ப டுத்தப்படுகிறது. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட இத்திட்டத்தில், மேட்டுப்பா ளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து பன்னிம டைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோ கிக்கப்படவுள்ளது. பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் முழு சோதனை ஓட்டம் செய்து நவ.,1 முதல் குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதா வது:-
பில்லூர்-3 குடிநீர் திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் 800 மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்க வேண்டி யுள்ளது. வரும், 25ந் தேதிக்குள் இதர பணிகளை யும் முடித்து சோதனை மேற்கொள்ளப்படும். அக்.,20க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நவ.,1 முதல் குடிநீர் வினியோகம் துவங்க திட்டமிட்டுள்ளோம்.
பில்லூர்-1 திட்டத்தில் மாநகராட்சிக்கு மட்டுமின்றி பல்லடம், பொங்கலூர் வரை தண்ணீர் செல்கிறது. பில்லூர்-2, 3 மாநகராட்சி பகுதி மக்களுக்கான திட்டம், பில்லூர்-3 துவங்கி விட்டால் தேவைக்கு அதிக மாக குடிநீர் கிடைக்கும். இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்,
- கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
- மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை:
அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களின் வரவேற்பை கமல்ஹாசன் ஏற்றுகொண்டார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேற்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் நீலகிரி போன்ற பகுதிகளில் இருந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி நிர்வாகிகளுடன் மேற்கு மண்டலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மக்களை சந்திக்க வேண்டும்.
மக்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன. எதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியாக சென்று மண்டல நிர்வாகிகள் மக்களிடம் கலந்துரையாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது, என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்பதை கட்சியினர் ஆய்வு செய்தனர். அதன்படி தென்சென்னை, கோவை அல்லது மதுரை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று என கட்சி நிர்வாகிகள் கருதினர். அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் தீவிர பணியாற்றி கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்ததும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் கருமத்தம்பட்டி பார்க் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.
விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று. அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
- சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார்.
- போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபதி(வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். இதனையடுத்து சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சிறுமியிடம் அவரது பாட்டி அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனால் சிறுமிக்கு அவரது பாட்டியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது.
இதனையடுத்து சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார். பின்னர் 2 பேரும் செஞ்சேரிபுதூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர்.
இந்தநிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பூபதி பொள்ளாச்சி ஜமீன் முத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.
கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானது. இதனையடுத்து பூபதி சிறுமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசவம் ஆக வாய்ப்பு உள்ளது என கூறினர். பின்னர் டாக்டர்கள் சிறுமியின் வயதை ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
- காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:
கோவை மாநகரின் மத்தியில் மத்திய ஜெயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இங்கு தடையை மீறி புகையிலை பொருட்கள், கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதனால் தினமும் ஜெயிலில் உள்ள அத்தனை வளாகங்களிலும் அங்கிருக்கும் வார்டன்கள் அனைவரும் ரோந்து செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை ஜெயிலில் பணியில் இருந்த 2 வார்டன்கள் மத்திய ஜெயிலில் உள்ள வால்மேடு என அழைக்கப்படும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர், எந்நேரமும் எங்களிடமே வந்து சோதனை செய்கிறீர்களே என கேட்டு சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இவர்களது சத்தம் கேட்டு சக வார்டன்கள் ஓடி வந்தனர். மேலும் ஏராளமான கைதிகளும் திரண்டு விட்டனர்.
கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு, வார்டன்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தகராறு செய்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
கைதிகளில் சிலர் மரங்களின் மீது ஏறி அமர்ந்துகொண்டு இதுபோன்று தொல்லை கொடுத்தால் கைகளை அறுத்து கொள்வோம் என கூறி கைகளை அறுத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் சில கைதிகள் வார்டன்களை தாக்கினர். இதில் மோகன்ராஜ், பாபு ஜான், விமல்ராஜ், ராகுல் ஆகிய 4 வார்டன்களும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 4 வார்டன்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டன்கள், கைதிகள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.
- அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
- மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி.
கோவை,
பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை.
எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க பேசிய கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவை பற்றி நான் தரக்குறைவாக எங்கேயும் விமர்சித்தது இல்லை.
நாளை அ.தி.மு.க தலைவர்களை பார்க்கும் போது அதே மரியாதையோடு தான் பழகுவேன். எனக்கும் அ.தி.மு.க தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் கிடையாது. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாற்று ரீதியாக நடந்த விஷயத்தை நான் பேசினேன். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






