search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dried up"

    • யானை உள்ளிட்ட விலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெருகின்றன
    • நவமலை, ஆழியார் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வறட்சியாக இருந்தது.

    இதன் காரணமாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இன்றி காணப்பட்டது.அதன்பின், தென்மேற்கு பருவமழையானது, ஜூன் மாதம் இறுதியில் பெய்ய துவங்கியது. இந்த மழை தொடர்ந்து ஒரு மாதமே நீடித்தது. இருப்பினும், பொள்ளாச்சியை அடுத்த பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை வனப்பகுதியில் உள்ள அருவி, நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென் றது. ஆங்காங்கே மலை முகடு களில் இருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது டன், ஆங்காங்கே புதிதாக சிற்றருவிகள் உருவானது. மேலும், வனப்பகுதி பச்சை பசேல் என காணப்பட்டது.

    ஆனால், தென்மேற்கு பருவமழை போதியளவு இல்லாமல் ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதி கரிக்க துவங்கியது. இந்த நிலை தற்போதும் நீடித்துள்ளது. வால்பாறை, ேசாலையார், பரம்பிக்குளம் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்தி ருந்தாலும், ஆழியார், நவ மலை, சர்க்கார்பதி, காடாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி போனது. அதிலும், கடந்த சில வாரமாக வெயிலின் தாக் கம் கடுமையாக இருந்தது.

    இதனால், இப்பகுதி வனத்தில் உள்ள நீரோடைகளிலும், சிற்றருவியிலும் தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோனது. எப்போதும் தண்ணீர் ஓரளவு வரத்து இருக்கும் நவமலை உள்ளிட்ட நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் பாறைகள் மட்டுமே தென்படுகிறது. வனத்திற்குள் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால், அடர்ந்த வனத்திலிருந்த யானை உள்ளிட்ட விலங்குகள், நீர் நிலையை தேடி இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. அதிலும், நவமலை, ஆழியார் பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் யானையின் நடமாட்டம் உள்ளது. இதனால், சுற்றுலா வரும் பயணிகளுக்கு, வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ×