search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர்-3 குடிநீர் திட்டப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன
    X

    ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர்-3 குடிநீர் திட்டப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன

    • முழு சோதனை ஓட்டம் நடத்தி ஒத்திகை பார்க்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டம்
    • கோவையில் நவ.1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகிக்க ஆயத்தம்

    கோவை,

    கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகள் முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரி வாக்க பகுதிகளுக்கு கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, 11 ேகாடி லிட்டர் வரை வழங்கப்படுகிறது. சிறுவாணியில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் பில் லூர் அணையே கோவைக்கு கைகொடுக்கிறது.

    இந்நிலையில், வரும் 2040ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பில்லூர்-3 குடிநீர் திட்டம் ரூ.779 கோடி மதிப்பீட்டில் செயல்ப டுத்தப்படுகிறது. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட இத்திட்டத்தில், மேட்டுப்பா ளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து பன்னிம டைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோ கிக்கப்படவுள்ளது. பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் முழு சோதனை ஓட்டம் செய்து நவ.,1 முதல் குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதா வது:-

    பில்லூர்-3 குடிநீர் திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் 800 மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்க வேண்டி யுள்ளது. வரும், 25ந் தேதிக்குள் இதர பணிகளை யும் முடித்து சோதனை மேற்கொள்ளப்படும். அக்.,20க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நவ.,1 முதல் குடிநீர் வினியோகம் துவங்க திட்டமிட்டுள்ளோம்.

    பில்லூர்-1 திட்டத்தில் மாநகராட்சிக்கு மட்டுமின்றி பல்லடம், பொங்கலூர் வரை தண்ணீர் செல்கிறது. பில்லூர்-2, 3 மாநகராட்சி பகுதி மக்களுக்கான திட்டம், பில்லூர்-3 துவங்கி விட்டால் தேவைக்கு அதிக மாக குடிநீர் கிடைக்கும். இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்,

    Next Story
    ×