search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம்
    X

    கோவை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய 2 நாட்களில் நேரடியாக செலுத்தலாம்
    • கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல்

    கோவை,

    பொதுமக்கள் மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து சொத்து வரிகளின் நிலுவை களை செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் நாளை (23-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24-ந் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

    இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    2023-2024ம் நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டு வரும் 30-ந் தேதி நிறைவடைய உள்ளது.

    ஆகையால் வரும் அக்டோபர் 1ந் தேதிக்கு மேல் செலுத்தப்படும் முதலாம் அரையாண்டு க்குரிய சொத்து வரியுடன் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 1 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

    எனவே பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை என அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய இரண்டு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.

    அதன்படி, கிழக்கு மண்டலம்-56 மற்றும் 57-வது வார்டு பகுதிகளுக்கு ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி சங்கம் மைதா னத்திலும், மேற்கு மண்டலம் 38 வார்டு பொம்மானாம்பா ளையம் புவனேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும், 73-வது வார்டு பொன்னைய ராஜபுரம் வார்டு அலுவலகத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

    அதே போல தெற்கு மண்டலம் 88ம் வார்டு தர்மராஜா கோவில் வளாகம், 96-வது வார்டு குறிச்சி மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    வடக்கு மண்டலம் 11-வது வார்டு ஜனதா நகர் சூர்யா கார்டன் பகுதியிலும், 19-வது வார்டு மணிகா ரம்பாளையம் அம்மா உணவகத்தில் நடைபெற வுள்ளது.

    மத்திய மண்டலத்தில் 33-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணசாமி வீதி, 62-வது வார்டு சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது ஆண்டு பெருமாள் கோவில் வீதி, 80-வது வார்டு கேம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் உட்பட மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழக்கம் போல செயல்படும். ஆகையால் இந்த வசதி யினை முழுமையாக பயன்படுத்தி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு முதலாம் அரையாண்டு வரையிலான நிலுவைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×