என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் தம்பதியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
- குடிபோதையில் இருந்தவர் தாக்கியதால் 2 பற்கள் உடைந்தது
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வடக்கு சாமிசெட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 62). ஆட்டோ டிரைவர்.
இவரும் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அர்ஜூன் (37) என்பவரும் வண்ணான்கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்த நிலையில் அர்ஜூனின் நடவடிக்கைகள் செல்வராஜூக்கு பிடிக்காததால் கடந்த 2 மாதங்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதன்காரணமாக அர்ஜூனுக்கு செல்வராஜ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர் செல்வராஜின் முகத்தில் குத்தினார்.
அப்போது அவரது 2 பற்கள் உடைந்து விழுந்தது. இதனை பார்த்த செல்வராஜின் மனைவி தடுக்க சென்றார். அவரையும் அர்ஜூன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.
இது குறித்து செல்வராஜ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அர்ஜூனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






