என் மலர்
கோயம்புத்தூர்
- ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
- எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மோடியே பிரதமராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.
கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசிய தலைமை தான் செய்யும். அவர்களின் வழிகாட்டுதல் படியே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு பணிகளும் நடக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு. தனி சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
இப்போதைக்கு தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறது. மாநில தலைவரும் தேசிய தலைமை முடிவு செய்யும் என சொல்லி இருக்கிறார். எனவே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.
மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசிய தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள். எனவே தேசிய தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை
கூட்டணி விஷயங்களை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசிய தலைமை தான் வழிநடத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- நாளை மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம் நடக்க உள்ளது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை மேட்டுப்பாளையத்தில் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது மேட்டுப்பாளையம் நடைபயண நிகழ்ச்சி அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாளை மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம் நடக்க உள்ளது. அன்றைய தினம் நாமும் நடைபயணம் மேற்கொண்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என கட்சி நிர்வாகிகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று "என் மண், என் மக்கள்" யாத்திரை நடைபயணம் அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மக்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரம்மகமலம் மலர் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
மேட்டுப்பாளையம்,
உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம்.
இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங்கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலரும்.
அதிகாலைக்குள் உதிா்ந்து விடும். என்றாலும் இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோ்ந்தது என கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை பாதுகாக்க உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த மலா் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் பூ அன்னூர் அருகே பொகலூர் பகுதியை சேர்ந்த பூசாரியான முத்துச்சாமி என்பவரின் வீட்டில் 3 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு முன்னா் வந்துள்ளது.
இதனிடையே நேற்று காலை முதல் மொட்டு மலர தொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம கமலம் மலா் வெண்ணிலவை போல் காட்சியளித்தது. இதையறிந்த பொதுமக்கள் பலா் ஆச்சரியத்துடன் பாா்த்து வரம் கேட்டு வேண்டியதோடு சுயபடம் எடுத்துக்கொண்டு உறவினா்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனா்.
- 8 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
- விவசாயிகள் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கணுவக்கரை உள்ளிட்ட அன்னூரின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பெய்த கனமழை. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசம்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கணுவக்கரை, ஆலப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கணுவக்கரை, ஆலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.மழையுடன் சூறாவளி காற்றும் சேர்ந்து வீசியதால் கணுவக்கரை, ஆலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 8,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாயின.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும்,அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனத்தில் இருந்து யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
- அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை ஊராட்சியில் கோரப்பதி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அடர் வனப்பகுதியை ஒட்டி இப்பகுதிகள் உள்ளன. இதனால் வனத்தில் இருந்து யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரப்பதி பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற போது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த யானை குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனால்
அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் கொங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் அந்த பகுதியில் வெல்டிங் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இந்தநிலையில் சிவக்குமார் தொழில் தேவைக்காகவும், மகனை படிக்க வைப்பதற்காகவும் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
- பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் பட்டறை அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையோர முட்புதரில் சிக்கி தவிப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவிக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் அங்கு வந்த மலைப்பாம்பினை மீட்டு பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது.
- 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
கோவை,
அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.
பற்றாக்குறையை எதிர்கொள்ள பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில் சாலை மார்க்கமாக தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுகிறது.
அரிசி கொள்முதல் மற்றும் வினியோகம் குறித்துஎப்சிஐ கோவை மண்டல மேலாளர் மணிபூஷன்குமார் சுமன் கூறியதாவது:-
மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு கழகம் செயல்பட்டு வருகிறது.
பொதுவினியோக திட்டம்(ரேஷன் கடைகள்), இதர நலத்திட்டங்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் வகையில் விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு அரிசி, கோதுமையை கொண்டு வருவதில் இந்திய உணவு கழகம் முக்கிய பங்காற்றுகிறது.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையின்படி இந்த விலையாணது நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு அந்த நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது.
அங்கிருந்து கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
நெல் கொள்முதல், அரவை, போக்குவரத்து, அரிசி சேமிப்பு ஆகியவற்றுக்கு சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.33 செலவாகிறது.
இந்த செலவீனங்களை முழுமையாக உணவு மானியமாக தமிழக அரசுக்கு இந்திய உணவு கழகம் வழங்குகிறது.
மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு வழங்கப்படும் அரிசிக்கான செல்வை முழூ மானியமாக மத்திய அரசு மூலம் இந்திய உணவு கழகம் வழங்குகிறது.
கடந்த ஜனவரிக்கு முன்பு வரை ஒரு கிலோ அரிக்கு மானியம் போக மாநில அரசிடம் இருந்து ரூ.3 பெறப்பட்டு வந்து. கடந்த ஜனவரி முதல் அந்த தொகையையும் மானியமாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
67 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் எஞ்சியுள்ளவர்களுக்கு தேவைப்படும் அரிசியை கிலோவுக்கு ரூ.6.10, கோதுமைக்கு ரூ.8.30 அளித்து மாநில அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக்கொள்கிறது.
ரத்த சோகையை கட்டுப்படுத்தவும், இரும்பு சத்து, வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்கவும், இந்திய உணவு கழகம் மூலம் கடந்த ஏப்ரல் முதல் முழுமையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
கோவை மண்டல இந்திய உணவு கழகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் மூலம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பரை 1.48 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது இந்திய உணவு கழகத்தின் மேலாளர்கள் பிஜிமோல், நவநீத கிருஷ்ணன், தன்யா, அபிராமி, ஆத்மசீலன், மவுனிகாக உள்பட பலர் இருந்தனர்.
- தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகே சட்டவிரோதமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது,அவ்வழியாக ஆட்டோவில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ்(வயது39) என்பதும், ஆட்டோ டிரைவராக இருப்பதும் தெரியவந்தது.
மேலும், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார்.
- ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் பெரியார் நகரை சேர்ந்தவர் ராகவன் (வயது 61). தேயிலை தோட்ட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
ராகவன் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் தற்கொலை செய்ய போகிறேன் என கூறி விட்டு வெளியே செல்வார். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார்.
இதே போல ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் உருளிக்கல் சுடுகாட்டு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற கணவர் 2 நாட்களை கடந்தும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ராகவனை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் தொழிலாளியின் மகன் மாயமான தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராகவனை தேடி வந்தனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவர்கள் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஷேக்கல்முடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தேயிலை தோட்ட தொழிலாளி ராகவன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- பெற்ேறார் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர் பொள்ளாச்சியில் கணினி பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல்லை சேர்ந்தவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருபவருமான 27 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தார். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இளம் பெண்ணுக்கு மணமகனை தேடி வந்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.
கடந்த 27-ந் தேதி இளம் பெண்ணின் காதலன் விடுமுறையில் நாமக்கல்லுக்கு வந்தார்.
இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண் தனது பெற்றோரிடம் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு நாமக்கல்லுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை பார்க்க சென்றார். வெளியே சென்ற இளம்பெண் நீண்ட நேரம் ஆகியும திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி நாமக்கல்லுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் இளம் பெண்ணை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
- மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் மகாலிங்கம்(43). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி(38). இவர் அங்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மகாலிங்கம் குடிபோதையில், தனது மனைவி நடத்தி வந்த பெட்டிக்கடைக்கு தீ வைத்தார்.
இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி சமாதானம் ஆகி சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் மகாலிங்கம் குடித்து விட்டு வந்து தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.






