என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரியும் ஒற்றைக்காட்டு யானை
- வனத்தில் இருந்து யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
- அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை ஊராட்சியில் கோரப்பதி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அடர் வனப்பகுதியை ஒட்டி இப்பகுதிகள் உள்ளன. இதனால் வனத்தில் இருந்து யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரப்பதி பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற போது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த யானை குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனால்
அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story






