என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- 8 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
- விவசாயிகள் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கணுவக்கரை உள்ளிட்ட அன்னூரின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பெய்த கனமழை. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசம்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கணுவக்கரை, ஆலப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கணுவக்கரை, ஆலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.மழையுடன் சூறாவளி காற்றும் சேர்ந்து வீசியதால் கணுவக்கரை, ஆலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 8,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாயின.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும்,அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






