மேட்டுப்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது

தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகே சட்டவிரோதமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது,அவ்வழியாக ஆட்டோவில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ்(வயது39) என்பதும், ஆட்டோ டிரைவராக இருப்பதும் தெரியவந்தது.

மேலும், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com