என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வீதயை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஷபானா.

    இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஷபானா அவரது கணவரை பிரிந்து தாராபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    சாதிக்அலி பெரியர்வர்களிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறினார்.

    அதன்படி பெரியவர்கள் ஷபானாவிடம் பேசி பார்த்தனர். ஆனால் அவர் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாதிக்அலி தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அவர் வீட்டின் பின் பகுதியில் உள்ள ஆற்றுபாலத்துக்கு சென்றார்.

    அங்கு இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் குதித்து சாதிக் அலியை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்.

    கோவை,

    கோவையில் வருகிற 7-ந் ேததி நடைபெற உள்ள அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களிடையே உடல் தகுதி கலாசாரத்தை புகுத்தும் வகையில், அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டி, அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட த்தில் இப்போட்டியானது வருகிற 7-ந் தேதி நடைபெறவுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் தொடங்கும் இப்போட்டி எல்.ஐ.சி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தை வந்தடையும்.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்போர் தங்களது வயது சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் சான்றிதழ்களை அக்டோபர் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    இதில், முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000 மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும்.
    • அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும்.

    கோவை,

    சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதாெடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில் (எண் 06049) மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

    இதேபோல், அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும் மங்களூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (எண்.06050) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர். கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
    • சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர்,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்(35). இவர் நேற்று சூலூர் அருகே சுல்தான்பேட்டை அடுத்துள்ள பச்சார்பாளையம் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பரம்பிக்குளம் ஆழியாறு பிஏபி வாய்க்காலில் கார் பாய்ந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வருவதற்குள் காரில் சிக்கியிருந்த சதீஷ் மீட்கப்பட்டார். வாய்க்காலில் மிதந்தபடி கிடந்த காரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
    • கோவில் பஸ் அல்லது படிக்கட்டை பயன்படுத்த வேண்டுகோள்

    வடவள்ளி,

    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஏழாம்படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதனால் தினந்தோறும் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது மருதமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச்சீட்டு வழங்குமிடம் அகியவற்றுடன் கூடிய மின் தூக்கி (லிப்ட்) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச்சாலையில் உள்ள தார்சாலைகள் சீரமைத்தல் பணி, புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதிதாக ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் கோவில் தங்க ரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் நாளை (5-ந் தேதி) முதல் ஒரு மாதம் மருதமலை கோவிலுக்கு இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் பஸ்சையும், படி வழியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    • மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு
    • இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த மாதம், 20-ந் தேதி முதல் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பிரதான கால்வாயில் நேற்று காலை திடீரென உடைப்பு தண்ணீர் வெளியேறியது. அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் பாய்ந்து தண்ணீர் வீணானது.

    இதுகுறித்து விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், பி.ஏ.பி., தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், பகிர்மான குழு மற்றும் பாசன சபை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது உடைப்பு ஏற்பட்ட கரையில் மண் கொட்டப்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    விவசாயிகள் கூறும்போது வறட்சியான கால கட்டத்தில் ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இடது கரையில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது, அதே இடத்தில் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி உள்ளது. மண் அரிப்பா அல்லது திருட்டு முயற்சியால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:-

    பிரதான கால்வாய் மொத்தம் 124 கி.மீ., நீளம் உடையது. இப்பகுதியில் கால்வாய் வெட்டப்படாமல், மண் குவித்து உருவாக்க ப்பட்டது. ஆறு மாதம் தண்ணீர் செல்லும். ஆறு மாதம் நீர் செல்லாது.

    இதனால், கால்வாய் கரையில் இயற்கை காரணங்களால் நீர் கசிந்து உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். தற்போது மண் கொட்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 2 நாட்களுக்கு நீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று கான்கிரீட் பணிகள் மேற்கொண்டு நாளை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் முதல்முறையாக மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
    • தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை.

    கோவை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் வங்கி கணக்குகளுக்கு ரூ. 3749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா,ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும்.

    தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சனைகளுக்காக மட்டுமே நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். கடனுதவி வழங்கும் விழா அரசு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி மந்திரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி மந்திரி வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதி மந்திரி மகிழ்வாக இருந்தார். அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.

    கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். சென்னையில் நேற்று கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மாநில தலைவர் இல்லாமல் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படலாம்.

    தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திப்பு.
    • தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. கட்சி அறிவித்து விட்டது. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. சார்பில் இதுவரை எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், அ.தி.மு.க. உடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     

    கூட்டணி முறிவை தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்று இருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அங்கு மத்திய மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் சில தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் வந்திருக்கும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமல்கந்தசாமி மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் என அ.தி.மு.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் திடீரென சந்தித்து உள்ளனர்.

     

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிவுக்கு பிறகு கொங்கு சமூகம் அல்லாத அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர், தமிழக பா.ஜ.க.-வின் தற்காலிக பொறுப்பாளராக கூறப்படும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறி இருக்கிறது.

    மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் வகையில், தேர்தல் நகர்வுகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு செய்வதன் மூலம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கவும் தமிழக பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • வழியாக சென்றவர்கள் உடனடியாக அமீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    பீளமேடு.

    கோவை சிவானந்தபு ரத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் அமீன் (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் காளப்பட்ட மோகன் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அமீனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து அமீனை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினர். அவர்களை அமீன் துரத்தி சென்றார்.

    அப்போது அந்த வாலிபர்கள் கையில் வைத்து இருந்த கத்தியால் அமீனின் தலை உள்ளிட்ட இடங்களில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அமீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அமீனை கத்தியால் குத்தியது சரவணம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன், காளப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    கோவை,

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று நள்ளிரவு ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் விமானம் கோழிக்கோட்டிற்கு வந்தது. அப்போது அங்கு மோசமான வானிலை நிலவியது.

    இதன் காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விமானி விமானத்தை கோவை விமான நிலையத்துக்கு திருப்பினார். அதிகாலை 4 மணிக்கு விமானம் கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

    பின்னர் விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் ஒய்வு எடுத்தனர். பின்னர் வானிலை சரியான பின்னர் 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார்.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா பற்றிய பேசிய கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மோதல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறிவை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு தேசிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

    இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார். கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சென்று சந்தித்தனர்.

    முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமல்கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் ஆகிய 3 பேர் அவரை சந்தித்து பேசினர்.

    அப்போது நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து கொடுத்து அவர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் உடன் இருந்தார்.

    பின்னர் கொடிசியாவில் நடந்த கடன் வழங்கும் விழாவிலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு பேசினர்.

    தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்களும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கோவையில் இன்று நடந்த விழாவில் 144 தென்னை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை 3 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதேசமயம் அ.தி.மு.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மற்றும் மந்திரியுமான நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ஏற்கனவே அ.தி.மு.க. - பா.ஜ.க. அணி முறிவு என்பது நாடகம் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று சென்னிமலையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருந்தார். இந்தநிலையில் அவர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.
    • தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும்

    கோவை,

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பாரதி காலனியில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு தூய்மை பணியாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சந்திராயன் 3 மாதிரியை மாணவிகளிடம் அவர் வழங்கினார்.

    மாணவர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    சந்திராயன் 3-ஐ சிலர் குறை கூறலாம். ஆனால் இது மிகப்பெரிய சாதனை. சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.

    பிரஞ்யான் அங்கு என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரிவித்து வருகின்றது. அங்கு இருக்கும் கெமிக்கல் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றது. 2047-ம் ஆண்டு இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கிரெடிட் அவுட்ரீச் என்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் இன்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர் காப்பீடு திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,749 கோடி கடன்களை பயனாளி களுக்கு காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த முறை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ர்கள் தென்னை சார்ந்த தொழில் புரியும் விவசாயிக ளுக்காக பல்வேறு கோரி க்கைகளை வைத்திருந்திரு ந்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு பல்வேறு வங்கிகள் மூலமாக 1400 தென்னை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கடன் வழங்கப்பட்டது என்றார்.

    இதனை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

    கடந்த முறை நான் டெல்லி செல்லும் போது தென்னைச் சார்ந்த தொழில் புரியும் விவசாயிகளையும் உடன் அழைத்துச் சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது கடன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். எல்லோரும் நினைப்பது போல் தென்னை விவசாயம் கேரளா வில் அதிகமாக இருப்ப தாக நினைக்கி ன்றார்கள்.

    ஆனால் உண்மையில் தமிழகத்தில் தான் தென்னை விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும். தென்னை சார்ந்த தொழிலில் படித்து முடித்து வங்கி கடன் பெற்று பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரைக்கு குறைந்த அளவு கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி , கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மத்திய அரசு செயலாளர் ஜோஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொ ண்டனர்.இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×