search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 7-ந்தேதி மாரத்தான் ஓட்டப்பந்தயம்- கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
    X

    கோவையில் 7-ந்தேதி மாரத்தான் ஓட்டப்பந்தயம்- கலெக்டர் கிராந்திகுமார் தகவல்

    • இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்.

    கோவை,

    கோவையில் வருகிற 7-ந் ேததி நடைபெற உள்ள அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களிடையே உடல் தகுதி கலாசாரத்தை புகுத்தும் வகையில், அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டி, அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட த்தில் இப்போட்டியானது வருகிற 7-ந் தேதி நடைபெறவுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் தொடங்கும் இப்போட்டி எல்.ஐ.சி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தை வந்தடையும்.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்போர் தங்களது வயது சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் சான்றிதழ்களை அக்டோபர் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    இதில், முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000 மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×