search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2047-ல் இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும்- மந்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேச்சு
    X

    2047-ல் இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும்- மந்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேச்சு

    • சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.
    • தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும்

    கோவை,

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பாரதி காலனியில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு தூய்மை பணியாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சந்திராயன் 3 மாதிரியை மாணவிகளிடம் அவர் வழங்கினார்.

    மாணவர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    சந்திராயன் 3-ஐ சிலர் குறை கூறலாம். ஆனால் இது மிகப்பெரிய சாதனை. சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.

    பிரஞ்யான் அங்கு என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரிவித்து வருகின்றது. அங்கு இருக்கும் கெமிக்கல் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றது. 2047-ம் ஆண்டு இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கிரெடிட் அவுட்ரீச் என்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் இன்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர் காப்பீடு திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,749 கோடி கடன்களை பயனாளி களுக்கு காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த முறை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ர்கள் தென்னை சார்ந்த தொழில் புரியும் விவசாயிக ளுக்காக பல்வேறு கோரி க்கைகளை வைத்திருந்திரு ந்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு பல்வேறு வங்கிகள் மூலமாக 1400 தென்னை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கடன் வழங்கப்பட்டது என்றார்.

    இதனை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

    கடந்த முறை நான் டெல்லி செல்லும் போது தென்னைச் சார்ந்த தொழில் புரியும் விவசாயிகளையும் உடன் அழைத்துச் சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது கடன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். எல்லோரும் நினைப்பது போல் தென்னை விவசாயம் கேரளா வில் அதிகமாக இருப்ப தாக நினைக்கி ன்றார்கள்.

    ஆனால் உண்மையில் தமிழகத்தில் தான் தென்னை விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும். தென்னை சார்ந்த தொழிலில் படித்து முடித்து வங்கி கடன் பெற்று பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரைக்கு குறைந்த அளவு கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி , கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மத்திய அரசு செயலாளர் ஜோஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொ ண்டனர்.இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×