என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சொத்துக்களை உறவினர்கள் அபகரித்ததாக குறைதீர்க்கும் முகாமில் கதறல்
    • நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவர்களது கோரிக்கைகளை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பெண்ணை அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எங்களது குடும்ப சொத்து 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனக்குத் தெரியாமல் எனது உறவினர்கள் சிலர் சேர்ந்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகருக்கு விற்று விட்டனர்.

    அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும். ஆனால் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளாக தொட ர்ந்து மனு அளித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி மனு அளிக்க அந்த பெண்ணை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
    • பொதுமக்கள் புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளி யிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:-

    கோவை மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணியுடன் பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் ஏற்படும் குடிநீர்கசிவுகள் உடனுக்குடன் சரி செய்யப் படுகிறது.

    இருந்தபோதிலும் பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்கள், வணிகம் -கல்வி நிறுவனங்களின் குடிநீர் பைப்புகள் மற்றும் பிரதான குழாய்களில் பழுது ஏற்படும்போது நீர்க்கசிவு காரணமாக குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் சூழ்நிலை உள்ளது.

    எனவே கோவை மாநகரில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்தால் அந்தந்த பகுதிகளில் வசி க்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் விநியோக அதிகாரிகளின் அலைபேசி எண்கள் மற்றும் மாநகராட்சி உதவி எண்: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம். மேலும் மாநகராட்சி நகர்நல அதிகாரியின் கைபேசி எண்:94435-38765 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    பொதுமக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உடனடியாக பழுதுகளை சரிசெய்து சுத்தமான குடிநீர் கிடைப்ப தற்கான ஏற்பாடு செய்வர்.

    இவ்வாறு அந்த செய்தி க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம்
    • ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் வரை கடை திறந்திருந்தது. அதன்பிறகு கடையை மூடி விட்டு முருகன் தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    மாலை 6 மணியளவில் ஜவுளிக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறி யுள்ளது. இதனை ஜவுளிக்கடைக்கு மேல் உள்ள கட்டிடத்தில் கடை நடத்தி வரும் இருகூரை சேர்ந்த நவீன் (24) என்பவர் பார்த்தார்.உடனே அவர் ஜவுளி க்கடை உரிமையாளரான முருகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு, தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் கடையை திறந்தபோது, கடைக்குள் தீ பற்றி கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி விட்டன.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில், விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம் ஆகின.

    தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி நிகழ்ந்தது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்
    • பெரியநாயக்கன்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவூத்து கோலனுரை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் ஆறுச்சாமி தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கிளப் பாரில் மது குடிப்பதற்காக சென்றார். மது குடித்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி இறந்தார். இதனை பார்த்த பார் ஊழியர்கள் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ஆறுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் கோரிக்கை
    • ஆனைமலை போலீசார் காதலர்களிடம் விசாரணை

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கொடிக்காள் வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகள் ஆப்லின் பானு (வயது 20). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் நந்திஸ்வரன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்இந்த காதல் விவகாரம் ஆப்லின் பானுவின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலை பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளி யேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 4-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டிற்கு சென்றனர். பின்னர் ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றனர். தங்களது மகள் மாயமானது குறித்து ஆப்லின் பானுவின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி ஓட்டல் தொழிலாளி சாவு
    • லாரி மோதியதில் மொபட்டில் சென்ற என்ஜினீயர் பலி

    கோவை,

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு யாதவ் (வயது 25). இவர் நீலாம்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

    பின்னர் அவினாசி ரோடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சோட்டு யாதவ் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சோட்டு யாதவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (49). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார்.

    மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலசுந்தரம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி ஆற்றில் குளிக்க சென்றபோது பரிதாபம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வெண்ணல் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் (64). இவருக்கு புஷ்பலதா(58) என்ற மனைவி உள்ளார். ராஜன் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச்சென்றுள்ளார்.பின்னர் மாலை பணி முடிந்து ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் ஆழமான பகுதிக்குச்சென்று நீரில் மூழ்கினார். ராஜன் பணிக்கு தான் சென்றுள்ளார் என்பதால் புஷ்பலதாவும் அவரை தேடவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை குத்தாரிபாளையம் புதிய பம்பு ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ராஜன் சடலமாக கரை ஒதுங்கி இருப்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் ராஜனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
    • போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

    குனியமுத்தூர்,

    கோவை ஆத்துப்பாலம் முக்கிய சாலைகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் கோவை துடியலூரியில் இருந்து தேயிலை தூள்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரளாவிற்கு செல்வதற்காக இந்த வழியாக வந்தது.

    கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் வந்த போது, கன்டெய்னர் லாரி திடீரென வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டது. லாரி டிரைவர் எவ்வள வோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் அதன்பின்னால் வந்த வாகனங்கள் அனை த்தும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    ஆத்துப்பாலம் பகுதி முக்கிய சாலைகளை இணைக்க கூடிய சந்திப்பு என்பதால் பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலை, பாலக்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதற்கிடையே அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. லாரி சிக்கி கொண்டதால் வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றிருந்தன. உடனடியாக மக்களை விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தி, ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.

    இதற்கிடையே லாரி சிக்கிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து மேம்பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியும் நடந்தது. வெகு நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து சென்றது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை லாரி ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த பகுதி முக்கிய சந்திப்பாக இருப்ப தால் எப்போதுமே போக்கு வரத்து அதிகமாக இருக்கும். எனவே இங்கு நடைபெறும் மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
    • மழுக்குப்பாறை சோதனை சாவடியின் இருபுறமும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல கேரள மாநிலம் சாலக்குடி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் வால்பாறை நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கி சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    இந்த நிலையில் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியிலான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சாலக்குடியில் இருந்து வரும் வழியில் உள்ள வாளச்சால் என்ற பகுதியிலும், வால்பாறையில் இருந்து செல்லும் வழியில் மழுக்குப்பாறை என்ற இடத்திலும் சோதனை சாவடிகளில் இருபுறங்களிலும் இருந்து வரும் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

    மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழியில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிப்பதாக திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்து கொண்டவர்
    • திருமணமாகி 4 ஆண்டுகளில் பலியானதால்ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

    கோவை,

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27).

    இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு வீட்ைட விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சவுந்தர்யா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார் தனது மனை வியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சவுந்தர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தொண்டாமு த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 வருடத்தில் சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.

    • கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.

    அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்
    • தமிழக மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

    கோவை,

    கோவை மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒரு பகுதி, ஓரைக்கால் பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×