என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீருடன் கழிவுநீர்"
- அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
- பொதுமக்கள் புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோவை,
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளி யிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:-
கோவை மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணியுடன் பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் ஏற்படும் குடிநீர்கசிவுகள் உடனுக்குடன் சரி செய்யப் படுகிறது.
இருந்தபோதிலும் பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்கள், வணிகம் -கல்வி நிறுவனங்களின் குடிநீர் பைப்புகள் மற்றும் பிரதான குழாய்களில் பழுது ஏற்படும்போது நீர்க்கசிவு காரணமாக குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே கோவை மாநகரில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்தால் அந்தந்த பகுதிகளில் வசி க்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் விநியோக அதிகாரிகளின் அலைபேசி எண்கள் மற்றும் மாநகராட்சி உதவி எண்: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம். மேலும் மாநகராட்சி நகர்நல அதிகாரியின் கைபேசி எண்:94435-38765 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உடனடியாக பழுதுகளை சரிசெய்து சுத்தமான குடிநீர் கிடைப்ப தற்கான ஏற்பாடு செய்வர்.
இவ்வாறு அந்த செய்தி க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.






