search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய கன்டெய்னர் லாரி
    X

    கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய கன்டெய்னர் லாரி

    • பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
    • போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

    குனியமுத்தூர்,

    கோவை ஆத்துப்பாலம் முக்கிய சாலைகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் கோவை துடியலூரியில் இருந்து தேயிலை தூள்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரளாவிற்கு செல்வதற்காக இந்த வழியாக வந்தது.

    கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் வந்த போது, கன்டெய்னர் லாரி திடீரென வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டது. லாரி டிரைவர் எவ்வள வோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் அதன்பின்னால் வந்த வாகனங்கள் அனை த்தும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    ஆத்துப்பாலம் பகுதி முக்கிய சாலைகளை இணைக்க கூடிய சந்திப்பு என்பதால் பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலை, பாலக்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதற்கிடையே அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. லாரி சிக்கி கொண்டதால் வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றிருந்தன. உடனடியாக மக்களை விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தி, ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.

    இதற்கிடையே லாரி சிக்கிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து மேம்பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியும் நடந்தது. வெகு நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து சென்றது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை லாரி ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த பகுதி முக்கிய சந்திப்பாக இருப்ப தால் எப்போதுமே போக்கு வரத்து அதிகமாக இருக்கும். எனவே இங்கு நடைபெறும் மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×