கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பலி

பவானி ஆற்றில் குளிக்க சென்றபோது பரிதாபம் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பலி
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் வெண்ணல் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் (64). இவருக்கு புஷ்பலதா(58) என்ற மனைவி உள்ளார். ராஜன் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச்சென்றுள்ளார்.பின்னர் மாலை பணி முடிந்து ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் ஆழமான பகுதிக்குச்சென்று நீரில் மூழ்கினார். ராஜன் பணிக்கு தான் சென்றுள்ளார் என்பதால் புஷ்பலதாவும் அவரை தேடவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை குத்தாரிபாளையம் புதிய பம்பு ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ராஜன் சடலமாக கரை ஒதுங்கி இருப்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் ராஜனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com