ஆனைமலை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் கோரிக்கை ஆனைமலை போலீசார் காதலர்களிடம் விசாரணை
ஆனைமலை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

கோவை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கொடிக்காள் வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகள் ஆப்லின் பானு (வயது 20). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் நந்திஸ்வரன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்இந்த காதல் விவகாரம் ஆப்லின் பானுவின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலை பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளி யேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 4-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டிற்கு சென்றனர். பின்னர் ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றனர். தங்களது மகள் மாயமானது குறித்து ஆப்லின் பானுவின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com