என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • காலையில் சாப்பிடாமல் சென்றதால் பரிதாம்
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28).

    இவர் வாரந்ேதாறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதால் தினேஷ்குமார் நண்பர்க ளுடன் கிரிக்கெட் விளை யாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் சாப்பிடாமல் பந்து வீசினார். திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

    இதனையடுத்து தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தினே ஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • குழந்தையை கொடுப்பது போல நடித்து கைவரிசை
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளம் சுப்பையா நகரை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி மணியம்மாள் (வயது 60).

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சிக்கு செல்வதற்கு திட்டமிட்டார். அதன்படி ஓடையாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார்.

    பஸ்சில் கூட்டம் அதிக மாக இருந்ததால் இளம்பெண் தனது குழந்தையை மணியம்மாளிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தெரியாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை இளம்பெண் பறித்தார். பின்னர் இளம்பெண் மார்க்கெட் சந்திப்பில் இறங்கி சென்றார். அதன் பின்னர் மூதாட்டி தனது கழுத்தை பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.

    இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு
    • 22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்டை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன.

    இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அண்மைக்காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி திரிகின்றன.

    வால்பாறை அருகே கருமலை எஸ்டேட், ஐயர் பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட் பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் 22 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

    இந்நிலையில் அப்பர் பாரனை எஸ்டேட் வனப்பகுதிக்குள் இந்த 22 யானைகளும் முகாமிட்டிருந்தன. மாலையில் அங்கிருந்து தேயிலைத் தோட்டம் வழியாக புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன.

    இதனை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு ஊருக்குள் வராமல் விரட்டி விட்டனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது.

    எனவே குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வேறு இடத்தில் மணமகன் தேடியதால் தப்பி ஓட்டம்
    • பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    காேவை,

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள செம்பாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 20).

    இவர் திருப்பூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தமிழ்செல்வின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது மகளுக்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மணமகனை தேடி வந்தனர்.

    இதனால் காதலை பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்த கையோடு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசா ரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் தின்று மயங்கி விழுந்தார்
    • கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் அபிராமி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    அபிராமி யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை சாப்பிட்டார். பின்னர் யாரிடமும் சொல்லாமல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வேலையில் இருந்த போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அபிரா மியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அபிராமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனவிலங்குகளின் தொல்லை அதிகரிப்பு எதிரொலி
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுதிட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து ள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

    தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து கிடப்பதாலேயே வனவிலங்குகள் இருப்பது தெரிவதில்லை.

    எனவே தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து, அமுல்கந்த சாமி எம்.எல்.ஏ., மேற்படி இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகல்லார், அய்யர் பாடி, மாணிக்க என்.சி, லோயர்பாரளை, அய்யர்பாடி அந்தோணியார் கோவில், கக்கன் காலனி, கருமலை எஸ்டேட், வில்லோனி அப்பர் டிவிசன், கல்யாண பந்தல் மாரியம்மன் கோவில், ரொட்டிக்கடை பாறைமேடு உள்ளிட்ட 11 இடங்களில் சோலார் எல்இடி விளக்குகள் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த தோட்டத் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ.வை அவரது அலு வலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, நகர அ.தி.மு.க செயலாளர் மயில் கணேசன், அவை தலைவர் சுடர் பாலு, செந்தில் பாலு, செல் கணேசன், சண்முகவேல், எஸ்.கே.ஸ்.பாலு, சீனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காட்டாற்று வெள்ளம் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது
    • மாயமான பெண்ணை தேடும் பணி தீவிரம்

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 72). சித்தா டாக்டர். இவரது மனைவி தனலட்சுமி (62).

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிறுமுகை அருகே உள்ள தென் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர். கட்டாஞ்சி மலை அருகே சென்ற போது அங்கு கனமழை செய்தது. அங்குள்ள தரை பாலத்தில் சென்ற போது திடீரென காட்டு ஆற்று வெள்ளம் 2 பேரையும் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது.

    அப்போது வெங்கடேசன் கரையோரம் இருந்த செடிகளை பிடித்து தப்பினார். ஆனால் அவரது மனைவியை வெள்ளம் அடித்து சென்றது.

    இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் உண்மை தெரிய வந்தது
    • போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடிந்து உள்ளார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அவரது உறவினர் மகனாக 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் பழனிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் திருமணம் செய்தனர். இதனையடுத்து 2 பேரும் செட்டிக்காபாளையத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமிக்கு ரத்த பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பார்த்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    பின்னர் டாக்டர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 17 வயதில் திருமணம் செய்து கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி மக்கள் தற்போது தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 வாரங்களாகவே அங்குள்ள ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

    பொதுமக்களை கவரும் வகையில் கடைகளும் தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளதால், மக்கள் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கு அணிய புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதியில் காலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாடைகளை எடுத்து சென்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் காணப்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் கூடுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வெடிகுண்டு நிபுணர்களும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    நேற்று முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இன்று காலை, வெடிகுண்டு நிபுணர் குழுவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரிய கடைவீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர். தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கோனியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் சோதனை நடைபெற்றது. ரெயில் நிலைய பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    யாராவது ரெயிலில் வெடிபொருட்களை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை தினமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.
    • நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    கோவை:

    தமிழகத்தில் எண்ணற்ற அரசு பள்ளிகள் உள்ளன. இதுதவிர அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதிகளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், பேண்ட், சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை எண் 67 ஒன்றை வெளியிட்டது. அதில் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியைகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட உடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும், ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய அடையாளமான வேட்டி, சட்டை, சாதாரண பேண்ட், சட்டை என தங்களுக்கு பிடித்தமானவற்றை அணியலாம்.

    இப்படி ஒரு அரசாணை இருப்பது இதுவரை தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.

    அரசாணை தெரிந்து, சில ஆசிரியைகள் சுடிதார் அணிந்து சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசாணை பற்றி அறிந்து கொள்ள முயலாமல் ஆசிரியைகளை திட்டுவதுடன், இனி இதுபோன்று அணியக்கூடாது எனவும் அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதனால் தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.

    கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரும் இதுபோன்ற சம்பவத்தை கடந்து வந்துள்ளார்.

    கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 35 வயது பெண் ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் பள்ளிக்கு புடவை கட்டியே வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது அவருக்கு வசதியாக இல்லை என தோன்றியுள்ளது.

    இருப்பினும் பள்ளிக்கு புடவை தானே கட்டி செல்ல வேண்டும் என கட்டி சென்றார். இந்த நிலையில் தான், அவருக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து கொள்ளலாம் என்று ஒரு அரசாணை இருப்பதே தெரியவந்தது.

    இதையடுத்து அவர் பள்ளிக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து சென்றார். இதை பார்த்த சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் இது பள்ளி, இங்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது. உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    அதற்கு அந்த பெண் ஆசிரியை, தமிழக அரசே ஆசிரியர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், புடவை இந்த 3-ல் எதுவென்றாலும் அணிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. அதன்படியே எனக்கு புடவை வசதியாக இல்லாத காரணத்தால் நான் சுடிதார் அணிந்து வந்தேன் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் தலைமை ஆசிரியர், அப்படி ஒரு அரசாணையே கிடையாது. நீங்கள் அணிந்து வந்தது தவறு. இனி இதுபோன்று அணியாதீர்கள் என ஆசிரியையை எச்சரித்துள்ளார்.

    இதையடுத்து அந்த ஆசிரியை வேறு வழியின்றி தற்போது புடவை அணிந்தே பள்ளிக்கு செல்கிறார்.

    இதுகுறித்து அந்த பெண் ஆசிரியை கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், தங்களுக்கு பிடித்தமான ஆடைகளான, வேட்டி, சட்டை, சுடிதார், துப்பட்டா, சல்வார் கமீஸ், புடவை ஆகியவை அணிந்து கொள்ளலாம் என்றும், அது தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி தான் நான் அணிந்து சென்றேன். ஆனால் சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

    சில இடங்களில், புடவை அணியாமல் வரும் ஆசிரியைகளிடம் பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு விசாரணையும் நடத்துகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தும்.

    இப்படி ஒரு அரசாணை இருப்பது, தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும், சக ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

    இதனால் அவர்கள், விவரம் தெரிந்து அணிந்து வருபவர்களிடம் கூட பொத்தாம் பொதுவாக பள்ளி ஆசிரியைகள் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்று நெருக்கடி கொடுக்கின்றனர். மேலும் ஆசிரியைகள் சேலை அணிந்து தான் வரவேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

    மேலும் அவர்கள் நீங்கள் குறிப்பிடும் உத்தரவு பள்ளிகளுக்கு பொருந்தாது என குறிப்பிடுகின்றனர். எனவே நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பொதுசெயலாளர் ராம்குமார் கூறும்போது, இதுபோன்று எண்ணற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். இந்த அரசாணை தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    "ஆசிரியர் மனசு" திட்ட இயக்குனர் கூறும்போது, ஆசிரியைகள் சுடிதார் மற்றும் நவநாகரிக உடைகள் அணிந்து பள்ளிக்கு வரலாம். இதுகுறித்து அரசாங்கம் ஏற்கெனவே உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் இது தொடர்பாக விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    • சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இவரது வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.

    மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.

    மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.

    இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.

    சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர்.
    • தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கோவை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த பகுதிகளில் ஜவுளி தொழிலானது நலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.

    தொழில்களுக்கு மட்டுமின்றி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி, ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் விவகாரத்தின் போதே அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது நெல்லையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.

    எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பா.ஜ.கவினரை தேடி பிடித்து வழக்கு போட்டு வருகிறது. வழக்குகளுக்கு எல்லாம் பா.ஜ.க அஞ்சுவது கிடையாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்தித்து, இன்னும் வேகத்துடன் வேலை செய்பவர்கள் தான் பா.ஜ.கவினர். எனவே வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்.

    அரசு அனுப்ப கூடிய கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் வேலை அல்ல. அதனை படித்து பார்த்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்வார்.

    இவர்களுக்கு தாங்கள் அனுப்பும் கோப்புகளில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டால் கவர்னர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் கெட்டவர்கள் போன்று சித்தரிப்பார்கள். இதுதான் வழக்கமாக உள்ளது.

    கவர்னர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.

    தமிழகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கவர்னர்களை எதிர்த்து தமிழக, கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இப்படி எல்லாம் அவர்களை மிரட்டி ஒன்று செய்ய முடியாது. கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். மேலும் கவர்னர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×