search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் 11 இடங்களில் சோலார் விளக்குகள் அமைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு
    X

    வால்பாறையில் 11 இடங்களில் சோலார் விளக்குகள் அமைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு

    • வனவிலங்குகளின் தொல்லை அதிகரிப்பு எதிரொலி
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுதிட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து ள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

    தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து கிடப்பதாலேயே வனவிலங்குகள் இருப்பது தெரிவதில்லை.

    எனவே தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து, அமுல்கந்த சாமி எம்.எல்.ஏ., மேற்படி இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகல்லார், அய்யர் பாடி, மாணிக்க என்.சி, லோயர்பாரளை, அய்யர்பாடி அந்தோணியார் கோவில், கக்கன் காலனி, கருமலை எஸ்டேட், வில்லோனி அப்பர் டிவிசன், கல்யாண பந்தல் மாரியம்மன் கோவில், ரொட்டிக்கடை பாறைமேடு உள்ளிட்ட 11 இடங்களில் சோலார் எல்இடி விளக்குகள் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த தோட்டத் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ.வை அவரது அலு வலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, நகர அ.தி.மு.க செயலாளர் மயில் கணேசன், அவை தலைவர் சுடர் பாலு, செந்தில் பாலு, செல் கணேசன், சண்முகவேல், எஸ்.கே.ஸ்.பாலு, சீனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×