என் மலர்
செங்கல்பட்டு
- கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
- அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
அப்படி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.
வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஏலத்தில் தன்னுடைய செல்ஃபோனை தானே எடுத்துள்ளார் தினேஷ். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், உண்டியலில் விழுந்த பொருட்களை சட்டப்படி ஏலத்தில் விட வேண்டும் என்ற அடிப்படையில், செல்ஃபோனை ஏலத்தில் விட்டோம். ஏலத்தில் சென்ற அந்த செல்போனை, அதன் உரிமையாளரே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
- பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது45). தொழிலாளி. இவருக்கும் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிஉள்ளனர். இந்த நிலையில் பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பாபு வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் எரியும் தீயுடன் அங்கும் இங்கும் ஓடினார். இதனை கண்டு அருகில் நின்றவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த சிலர் பாபுவின் உடலில் பற்றிய தீயை அணைத்து மீட்டனர். பின்னர் உடல்கருகிய அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவர்.
- வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை விடும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனைக் காண விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவர்.
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் செவ்வாய்கிழமை பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை விடும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
- 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்கானிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 31-ந்தேதி நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசாட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
விருந்தினர்களை மகிழ்ச்சி படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள், பழங்களில் தயாரித்த பிரத்தியேக ஒயின் வகைகள், மது மற்றும் உழர் பழத்திலான கேக் வகைகள், விளையாட்டு போட்டிகள், டிஜே உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்து உள்ளன. இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆரம்பமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போட்டி போட்டு இளைஞர்களும், இளம் பெண்களும் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்ட விதிமுறைகள்படி அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும், ஏற்பாடுகள் குறித்து பகுதி போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், நள்ளிரவு 12:30க்குள் நிகழ்ச்சிகளை முடித்து விட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் என 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்கானிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ஓட்டல்களில் மது விருந்து நடைமுறைகள் குறித்து நேற்று மாமல்லபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்களபிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது பார் லைசென்சு வைத்திருப்போர் தடை செய்யப்பட்ட வெளி மாநில, வெளிநாட்டு மது வகைகளை பரிமாற கூடாது, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கக்கூடாது. அப்படி எவரேனும் பயன்படுத்தி வந்தால் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக போலீசுக்கு தகவல் தர வேண்டும். பார் அனுமதி இல்லாத உணவகங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தால் சீல் வைக்கப்படும். அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கி உள்ளன.
- 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பலவகை பறவைகள் வருகை தந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும்.
பின்னர் குடும்பத்துடன் பறவைகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர்களை தாண்டி பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
வழக்கமாக வடகிழக்கு மழைக்குப் பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகளின் வருகை தொடங்கி 6 மாதங்கள் வரை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ந்து அவ்வப்போது பெய்து வருகிறது.
இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கி உள்ளன.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை பாகிஸ்தான், சைபீரியா, பங்களாதேஷ், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை, கூழைக்கிடா, பாம்புதாரா, கரண்டி வாயன், தட்டைவாயன், நீர்காகம், முக்குளிப்பான், வக்கா மற்றும் வாத்து இனங்கள் உள்ளிட்ட 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன. அவை சரணாலயத்தில் உள்ள மரங்களின் மீது கூட்டம் கூட்டமாக இருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இதுவரை 15 ஆயிரம் பறவைகள் வந்திருப்பதாகவும், அவை ஏரியில் உள்ள மரங்களில் முட்டையிட்டு கூடுகள் கட்டி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரணாலயத்தில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கேமராவுக்கு ரூ.50, செல்போன் கேமராக்களுக்கு ரூ50, மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சீசன் தொடங்கி உள்ளதால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
- விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
சென்னை நெற்குன்றம், அழகம்மாள் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கணபதி(வயது35). இவர் தனது மனைவி சரண்யா, மகள் ரியா மற்றும் உறவினர்கள் ஜெயா அவரது மகள் ஹேமா(13) மகன் பாலா(10), ஆகியோருடன் திண்டுக்கல் நோக்கி நேற்று இரவு காரில் புறப்பட்டனர். அவர்கள் வத்தலகுண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. காரை கணபதி ஓட்டினார்.
நள்ளிரவு செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னை நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கணபதி குடும்பத்தினர் வந்த கார் சாலையை விட்டு இறங்கி அருகில் உள்ள முட்புதரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த கணபதி, சிறுவன் பாலா, சிறுமி ஹேமோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெயா, சரண்யா, 1 1/2 வயது குழந்தை ரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்து பற்றி அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்த பலியான கணபதி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஜெயா உள்பட 3 பேரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழை பெய்து கொண்டு இருந்த போது அதிவேகத்தில் கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா நகர், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் சுடுகாடு உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து டிராக்டர் மற்றும் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முழுவதும் இந்த சுடுகாட்டு பகுதி மற்றும் சுடுகாட்டை ஒட்டி உள்ள சுற்று சுவர் ஓரத்தில் ஊற்றப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு நீர் ஊற்றப்படுவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உருவாகி உள்ளது.
அப்பகுதி மக்கள் கழிவு நீரை ஊற்ற வரும் டிராக்டர், லாரி டிரைவர்களை கண்டித்தால் மிரட்டும் வகையில் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து கழிவுநீரை ஊற்றி வருகிறார்கள்.
எனவே கழிவு நீரை சுடுகாட்டு பகுதியில் ஊற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நெடுங்குன்றம் சுடுகாட்டில் கழிவு நீரை லாரி மற்றும் டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றி சென்று விடுகின்றனர். இதனை கண்டித்தால் டிரைவர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். போலீசில் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதுபற்றி பலமுறை போலீஸ் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
- காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதனால் பதறிய அவர் உண்டியலை திறந்து தனது செல்போனை திருப்பி தருமாறு கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தினேஷ் இது குறித்து சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அப்போது திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறிஅனுப்பி விட்டனர்.
இதையடுத்து திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர் தவறுதலாக செலுத்திய ஐபோனும் இருந்தது. இதுபற்றி தினேசுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்தார். அவர் ஐபோன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது.
வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோன் விழுந்த சம்பவம் பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாது:-
சென்னையை சேர்ந்த தினேஷ் என்பர் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.
இதற்கான சாத்தியக்கூறு இருந்தால் ஐபோன் திரும்ப வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
- திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
- காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதனால் பதறிய அவர் உண்டியலை திறந்து தனது செல்போனை திருப்பி தருமாறு கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தினேஷ் இது குறித்து சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அப்போது திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறிஅனுப்பி விட்டனர்.
இந்நிலையில் நேற்று திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர் தவறுதலாக செலுத்திய ஐபோனும் இருந்தது. இதுபற்றி தினேசுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்தார். அவர் ஐபோன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது.
உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
- ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திம்மாவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள திம்மாவரம் ஊராட்சியில் முறையான அனுமதியின்றி அரசு இடத்தில் தனியார் பெயரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் திம்மாவரம் ஊராட்சியில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டு சுத்திகரிப்பு நிலையம் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் முறையான அனுமதி பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
- மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை ஆகிய பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களுக்கு தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. 100 மீட்டர் தாண்டி, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 2.47 ஏக்கரில் உள்ள மரகதபூங்காவில் சுற்றுலாத்துறை, தனியார் முதலீட்டில்,ரூ. 6கோடி மதிப்பில் லேசர் ஒளியுடன் கூடிய "ஒளிரும் தோட்டம்" அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது. அதன் அருகே ஆழமான பள்ளம் தோண்டுவதால் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் தற்போது பணிகளை நிறுத்தக்கூறி தொல்லியல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
- கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
- வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனமானது, மாமல்லபுரம் அரசு கட்டிட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குவது வழக்கம்.

2023-2024-ம் ஆண்டிற்கான போட்டியாக ஓவியம், கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பிரிவுகளில், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் 25 பேர் கலைத் திறனாளியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமன், பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் மேலாளர் வேலு ஆகியோர் போட்டிகளின் செயல்பாட்டை கண்காணித்தனர்.






