அரசுப் பள்ளி உலக சாதனை: 1330 மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய திருவள்ளுவர்

இன்ஸ்டன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அரசுப் பள்ளி உலக சாதனை: 1330 மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய திருவள்ளுவர்
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 1330 மாணவ, மாணவியர்களை வைத்து திருவள்ளுவர் உருவம் அமைக்க அன்பு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.

இதையடுத்து 1330 மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் உருவத்தை பள்ளி அருகே திறந்தவெளி மைதானத்தில் வடிவமைத்தது.

இதனை "இன்ஸ்டன்" உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அரசு பள்ளிக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கியது.

அதில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி செல்வம் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நளினி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் சேர்மன் அரசு, அறக்கட்டளை தலைவர் பாபு, ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com