என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மறைமலைநகரில் வணிகர் தின மாநில மாநாடு- கொளத்தூர் த.ரவி அறிவிப்பு
    X

    சென்னை மறைமலைநகரில் வணிகர் தின மாநில மாநாடு- கொளத்தூர் த.ரவி அறிவிப்பு

    • சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

    சென்னை:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மே.5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது. சென்னை மறைமலைநகர் நகராட்சி திடலில் மிகபிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    "வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு" என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

    இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். வணிகர் நலன் கருதி இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறினார்.

    Next Story
    ×