என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஆண்மடம்:

    ஆண்டிமடம் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டி  விட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 5 லட்சம் ரொக்க பணம், 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். 

    இது குறித்து ஆண்டிமடம் போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அரியலூரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் குடும்பத்துடன் 7.9.18 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்களை தாக்கி விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயங்கொண்டம் பெரிய வளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (48), திருவாரூர் மனக்கரையை சேர்ந்த பெரியபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமசந்திரன் வீட்டில் 6 பவுன் கொள்ளையடித்ததும், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் அரியலூர் மாவட்ட எஸ்.பி அபினவ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்
    தொடர்ந்து செல்வம், பெரிய பாண்டி ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். 
    செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்து ரகசிய இடத்தில் சேமிக்கின்றனர். பின்னர் அதனை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அதே போன்று முள்ளுக்குறிச்சியில் இருந்து 2 டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றி ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை வாயில் அருகே வந்துகொண்டு இருந்தது. 

    அப்போது தளவாய் போலீசார் அந்த இரண்டு லாரிகளையும்  மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தளவாய் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகளையும் கைப்பற்றியதோடு லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன்,  முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக மேலூர், புதுச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தது ரூ.13 லட்சம் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த மேலூர் கிராமமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து கலெக்டர், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனு எழுதி கொடுத்தனர். #tamilnews
    அரியலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்ற வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடனுக்கான ரொக்கம் வழங்கும்போது விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக உரம் மற்றும் இடுபொருட்களையும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    விவசாய உறுப்பினர்கள் தொடக்க வேளாண்மைக் கூட் டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும்போது உரம் பெற்றுக் கொள்ள 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் யூரியா 874.50, பொட்டாஷ் 360.05, டி.ஏ.பி 585.15 மெ.டன், காம்ப்ளக்ஸ் 457.84 மெ.டன், கலப்பு உரங்கள் 88.55 மெ.டன், இதரம் 110.71 மெ.டன் ஆகக் கூடுதல் 2476.80 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது.
    தற்போது உரம் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலையை கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து உர நிறுவனங்களும் உயர்த்தியுள்ளது. எனினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ‘டான்பெட்’ மூலமாக தற்போது இருப்பில் உள்ள உரங்கள் விலையிலேயே விற்கப்படுகிறது.

    உரம் தயாரிப்பு நிறுவனங்கள் விலையேற்றத்திற்கு பின்வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களுக்கு பழைய விலைக்கே விற்பதனால் விவசாயிகளுக்கு டி.ஏ.பி 50 கிலோ ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1340, பழைய விற்பனை விலை ரூ.1290, வித்தியாசம் ரூ.50, யூரியா 45 கிலோ ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.266.50, பழைய விற்பனை விலை ரூ.266.50, 10:26:26 50 கிலோ  ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1280, பழைய விற்பனை விலை ரூ.1160, வித்தியாசம் ரூ.120 , 20:20:0:13 50 கிலோ  ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1015, பழைய விற்பனை விலை ரூ.950, வித்தியாசம் ரூ.65 என உர விற்பனையில் விலை வித்தியாசங்கள் காணப்படுகிறது.

    மேற்படி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்ற வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மண்டல இணைப்பதிவாளர் பழனிவேலு  தெரிவித்துள்ளார். #tamilnews
    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
    அரியலூர் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைப்பதற்கு தனி அறை தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைப்பதற்கு தனி அறை உள்ளது. கழிவறையை சுத்தம் செய்வதற்கான ஆசிட், வாளி மற்றும் மாப்பு உள்ளிட்டவைகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ரெயில் நிலையத்தில் துப்புரவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரெயில் நிலையம் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது அறையில் வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டில் கவிழ்ந்து அதனால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அரியலூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகள் பிரியா (வயது 17). இவர் அரியலூரில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரியில் படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ராணி (வயது 16). இவர் அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

    பிரியாவும், ராணியும் தோழிகள் ஆவர். 2 பேரும் சேர்ந்த பஸ் மூலம் அரியலூருக்கு சென்று படித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி பிரியாவும், ராணியும் கல்லூரி-பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்க்கு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் தா.பழுர் அடுத்த அணைகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் தேடியும் கிருஷ்ணவேணி கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழுர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    அண்ணனை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் முருகன்(வயது 38), சங்கர் (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகன் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சங்கர் மனைவியின் தம்பி சுரேசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்து தருவதாக சுரேஷிடம், முருகன் கூறியுள்ளார். இதில் முருகன், சங்கருக்கு இடையே கடந்த ஆண்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சங்கர், முருகனின் நெற்றி பொட்டில் கையால் அடித்துள்ளார். இதையடுத்து முருகன் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்து முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன் மனைவி பொன்னரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் சங்கருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    அரியலூர் அருகே குடிபோதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமான்-கடம்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கோமான் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 30) என் பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவரை வழி மறித்த போலீசார், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில் அவர் நான் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. ஏன் எனது வண்டியை மறுக்கிறீர்கள் என சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீஸ்காரர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் தேவேந்திரனை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மோதல் நடந்தபோது அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில் தேவேந்திரன், போலீஸ் காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள், தேவேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்த தூத்தூர் போலீசார், தேதேவந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் தேவேந்திரனை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வி விடுதி பணியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் வடமலை வரவேற்று பேசினார். சங்க ஆலோசகர் யாக்கோப்துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் அறிவழகன், மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சஞ்சய் காந்தி, பொருளாளர் பிரகதி, மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , ஒரு விடுதிக்கு குறைந்த பட்சம் 2 சமையலர்கள் நியமிக்க வேண்டும் , புதிய பென்சன் முறையை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் , துப்புரவு பணியாளர் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வி தகுதி உள்ள சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணி வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் கோபால் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார். #tamilnews
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து திருமானூர் பொதுமக்கள், கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

    அப்போது பேசிய கலெக்டர் விஜயலட்சுமி, பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மணல் குவாரி அமைந்துள்ள இடத்தில் ஐகோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழுவினர் வந்து பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மணல் குவாரி நிலவரம் குறித்து முடிவு எடுக்கப் படவுள்ளதாக கூறியதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். 
    ×