search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur District Cooperative Society"

    அரியலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்ற வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடனுக்கான ரொக்கம் வழங்கும்போது விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக உரம் மற்றும் இடுபொருட்களையும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    விவசாய உறுப்பினர்கள் தொடக்க வேளாண்மைக் கூட் டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும்போது உரம் பெற்றுக் கொள்ள 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் யூரியா 874.50, பொட்டாஷ் 360.05, டி.ஏ.பி 585.15 மெ.டன், காம்ப்ளக்ஸ் 457.84 மெ.டன், கலப்பு உரங்கள் 88.55 மெ.டன், இதரம் 110.71 மெ.டன் ஆகக் கூடுதல் 2476.80 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது.
    தற்போது உரம் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலையை கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து உர நிறுவனங்களும் உயர்த்தியுள்ளது. எனினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ‘டான்பெட்’ மூலமாக தற்போது இருப்பில் உள்ள உரங்கள் விலையிலேயே விற்கப்படுகிறது.

    உரம் தயாரிப்பு நிறுவனங்கள் விலையேற்றத்திற்கு பின்வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களுக்கு பழைய விலைக்கே விற்பதனால் விவசாயிகளுக்கு டி.ஏ.பி 50 கிலோ ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1340, பழைய விற்பனை விலை ரூ.1290, வித்தியாசம் ரூ.50, யூரியா 45 கிலோ ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.266.50, பழைய விற்பனை விலை ரூ.266.50, 10:26:26 50 கிலோ  ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1280, பழைய விற்பனை விலை ரூ.1160, வித்தியாசம் ரூ.120 , 20:20:0:13 50 கிலோ  ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1015, பழைய விற்பனை விலை ரூ.950, வித்தியாசம் ரூ.65 என உர விற்பனையில் விலை வித்தியாசங்கள் காணப்படுகிறது.

    மேற்படி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்ற வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மண்டல இணைப்பதிவாளர் பழனிவேலு  தெரிவித்துள்ளார். #tamilnews
    ×