என் மலர்
அரியலூர்
- அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்,
ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது, ஜமீன் ஆட்சி நடைபெற்றது, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் மன்னர்ஆட்சி ஒழிக்கப்பட்டது. அப்போது ஜமீன் மன்னர்கள் அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்தனர், அப்போது இருந்த அரசு நிலங்கள் எல்லாம் தனி நபர்பட்டா போட்டுள்ளனர்.அரியலூர்நகரில் உள்ள பிரதான சாலைகள் தேரோடும் தெருவீதிகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தற்போது நடை பாதையாக மாறிவிட்டது, கூட்ட நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து கொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் சாலை ஓரத்தில் கடைகள், வேன், கார், ஆட்டோக்களை நிறுத்திக்கொண்டிருக்கி றார்கள். சாலை ஓரத்தில் அனுமதியில்லாத விளம்பர தட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் இருந்தும், சாலை விபத்துகளிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அண்ணாசிலை, தேரடி, எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள் கோவில் தெரு, சத்திரம், சின்ன கடை தெரு, பெரியகடைதெரு பகுதியிலுள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்வக்கில் சுகுமார்உட்பட ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறுமிக்கு கட்டாய திருமணம்4 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
- அரியலூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குந்தபுரம், காலனித் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி முருகன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்(வயது 23).
இவர், கடந்த 2021-ம் ஆண்டு 11 -ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அதற்கு அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராதா கிருஷ்ணன் ஊர் நாட்ட மைகள் மூலம் பேசி, சிறுமியின் பெற்றோர் விருப்பமில்லாமல் அச்சிறு மியை கட்டாயப்படுத்தி கடந்த 23.5.2021 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.
இதற்கு ராதாகிருஷ்ணன் பெற்றோர் பழனியாண்டி (55), லதா(45), சகோதரர் பாலச்சந்தர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், 4 பேருக்கும் தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.
அரியலூர்,
அரியலூர்,மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட திட்ட அலுவலர், இலக்குவன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் அரியலூர்சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலை வாணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித்தா, ஆர்.டி.ஓ. அரியலூர் இராம கிருஷ்ணன், உடையார் பாளையம் பரிமளம் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 14 துறை சார்பில் 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்,
நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு சரக இணை பதிவாளர் தீபாசங்கரி நன்றி கூறினார்.
- சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர்தான் வழக்கில் துப்பு துலங்கியது.
- அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது எரிந்து கொண்டிருந்த உடலின் மீது அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சாக்கு, தார்ப்பாய் போன்றவற்றை போட்டு தீயை அணைத்தனர்.
இருப்பினும் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் காட்சியளித்தது. இதனால் எரிக்கப்பட்டது ஆணா?, பெண்ணா? என்பது உடனடியாக தெரியாத நிலை இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு போலீஸ் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது.
முந்திரி தோப்பில் இருந்து மோப்பம் பிடித்த படி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் எரிக்கப்பட்டவர் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எரிக்கப்பட்டவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீண்டும் முந்திரி காட்டிற்கே கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
அப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள தத்தனூர் குடிகாட்டில் இருந்து வடகடல் செல்லும் பாதையில் மெயின்ரோட்டில் ரத்தம் சிதறி கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேசை அவரது மனைவியே கொன்று எரித்த அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.
ஜெயங்கொண்டம் அருகே வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுப்பிரியா.
இவரது சித்தப்பா மகன் ஆலவாயை சேர்ந்த வேல்முருகன். அனுப்பிரியாவுக்கு வேல்முருகன் அண்ணன் முறை ஆகும்.
இந்த நிலையில் சகோதர, சகோதரி உறவு முறையை கடந்து அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுரேஷ் வியாபாரத்துக்காக சென்னை சென்ற வேளையில் வேல்முருகனும், அனுப்பிரியாவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விவரம் சுரேஷுக்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுரேசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
இதை தொடர்ந்து சம்பவத்தன்று அனுப்பிரியா சென்னையில் இருந்து சுரேஷை வரவழைத்தார். அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் அனுப்பிரியாவும், சுரேசும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்றனர்.
வடகடல் பிரிவு சாலையில் வந்தபோது அங்கு வேல்முருகன் வழிமறித்தார். அப்போது அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் மூட்டை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேல்முருகன், அனுப்பிரியாவை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- அரியலூரில்பாதுகாப்பான நடை பயிற்சி சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
- ஏற்கனவே திட்டமிட்டுள்ள சாலை பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நடைபயிற்சி திட்டத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் சின்னப்பா, கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கல்லூரி சாலை, பள்ளேரி கரை, அரசு மருத்துவமனைசாலை, பென்னிகவுஸ் சாலை, முருகன் கோவில், சத்திரம், எம்ஜிஆர் சிலை, தேரடி, அண்ணாசிலை, செட்டிஏரிகரை, ஜெயங்கொண்டம் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சென்று – மீண்டும் வந்த வழியாக செல்லவேண்டும் என நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதை கரடு முரடான பாதை, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் பாதை, இந்த வழித்தடத்தில் பேருந்து, லாரி, கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். இந்த பாதையில் நடைபயிற்சி மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கும். நடைபயிற்சி மேற்கொள்ள செட்டி ஏரிக்கரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், இருசுக்குட்டை, போன்ற இடங்களில் நான்கு பகுதி கரைகளையும் சீரமைத்து, மின்விளக்கு அமைத்து கொடுத்தால் ஆபத்து இல்லாமல் அமைதியாக பயமில்லாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே மாவட்ட கலெக்டர் மறுபரிசிலனை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூர் செஞ்சிலுவை சங்க தேர்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தல்
- இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்
அரியலூர்,
இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
அரியலூரில் கடந்த 20.10.2023 அன்று நடைபெற்ற இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் தேர்தல், சங்க விதிகளின் படி நடைபெறவில்லை. ஆகவே அன்று நடைபெற்ற தேர்தலை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தி, அதன் பிறகு மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலையரசன் தலைமை வகித்தார். முன்னாள் செயலரும், வக்கீலுமான பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய உறுப்பினர்ராஜேந்திரன், முன்னாள் கொள்கை பரப்புச் செயலர்இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் வாக்காளர் பட்டியில் திருத்த பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
- வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமை வகித்து, கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம் அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் வரதராஜன்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.மேலும் கல்லூரி மாணவிகள் ஊழல் தடுப்பு பற்றி கேள்விகள் எழுப்பியபோது, அதற்கு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிறப்பாக திறமையாக கேள்வி கேட்ட மாணவிகளை டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.இறுதியில் பள்ளி மாணவிகள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மதர் ஞானம்மா கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் தீபாவளியை முன்னிட்டு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
- கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, நலிவுற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 60 மேற்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றதுஅரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில், நடைபெற்ற இந்த விழாவில் கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சிவப்பிரகாசம், டாக்டர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கத் தலைவர் வி.கே.ராஜதுரை, செயலாளர் மதிவாணன், வட்டார தலைவர் அன்பரசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், பொருளாளர் ஹரிஹரன், சங்க நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ், அபிநயா, செல் பாலாஜி, மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
- தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை
அரியலூர்,
திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூர் பெரிய வியாபார ஸ்தலமாகும். 40 கி.மீ சுற்றளவு பகுதியிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், மளிகை, நகைகடை, ஜவுளிக்கடை ஆகியவை மிகவும் பிரபலமான நிறுவனங்கள் இங்கு உள்ளன.
அரியலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்துநிலையம் புறவழிச்சாலையில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருதையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
சேலம், ஆத்தூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், செந்துறை வழியாக வரும் பேருந்துகள் ரயில்வே மேம்பாலம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்.
கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக வரும் பேருந்துகள் கலெக்டர் அலுவலகம், புறவழிச்சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும்.
பொதுமக்கள் நலனை முன்னிட்டு தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து –நகரப்பகுதிக்குள் செல்ல நகரபேருந்துகளை இயக்கப்பட வேண்டும். மற்ற நாட்களில் லாரி, கனரக வாகனம், பேருந்து, கார். வேன், மினி லாரி சென்றுவர அனுமதிக்கக்கூடாது.பொதுமக்கள் நலன்கருதி கூட்டநெரிசல், சாலை விபத்தினை தடுக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலிஸ் சூப்பிரெண்டுக்கும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூரில் முதல் மனைவியை தாக்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்குதல்
அரியலூர்,
அரியலூர் அருகே அயன்ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் அ.தி.மு.க. பிரமுகர், ஒப்பந்தக்காரராகவும் உள்ளார். இவரது மகன் தமிழரசன் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தமிழரசனுக்கும் ஏழேரி கிராமத்தை சார்ந்த மாங்கனிக்கும் திருமணமாகி 10ஆண்டுகள் ஆகின்றது.குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாங்கனி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாங்கனி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழரசன் மாதம்தோறும் ரூ.6ஆயிரம் மாங்கனிக்கு ஜீவானம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழரசன் குழந்தை இல்லை என்ற காரணத்தை காட்டி அஸ்தினாபுரம் கிராமத்தை சார்ந்த திவ்யா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் தற்போது 8 மாத குழந்தை உள்ளது.முதல் மனைவி மாங்கனி தனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்று குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என தமிழரசனை வற்புறுத்தியுள்ளார்.
இதில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி தகராறாக மாறி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி மாங்கனி கொடுத்த புகாரின் பேரில் கணவர் தமிழரசன், 2வது மனைவி திவ்யா, மாமனார் நடராஜன், மாமியார் வளர்மதி, கணவரின் தம்பி பிரபாகரன், மற்றும் சிந்து உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழரசன் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- அரியலூர் ஊராட்சி குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர்.எம்.ஏ. பட்டதாரி, கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அ.தி.மு.க.வில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார், பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தஊரான பொய்யாதநல்லூரில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.அரியலூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியில் சொந்தமான லாட்ஜில் அவர் இருந்துள்ளார். அப்போது 3 பேர் அங்கு வந்துள்ளனர். சந்திரசேகரையும் அவரது டிரைவர்ராக்கியையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சந்திரசேகர்கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கண்ணு, விக்கி என்கிற விக்னேஸ்வரன், சக்தி ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதே போல செல்லக்கண்ணு என்பவர்கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர், ராக்கி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து அரியலூர் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.






