செஞ்சிலுவை சங்க தேர்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தல்

அரியலூர் செஞ்சிலுவை சங்க தேர்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தல் இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்
செஞ்சிலுவை சங்க தேர்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தல்
Published on

அரியலூர்,

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சிக் குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

அரியலூரில் கடந்த 20.10.2023 அன்று நடைபெற்ற இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் தேர்தல், சங்க விதிகளின் படி நடைபெறவில்லை. ஆகவே அன்று நடைபெற்ற தேர்தலை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்.

நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தி, அதன் பிறகு மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மீட்பு மற்றும் வளர்ச்சி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலையரசன் தலைமை வகித்தார். முன்னாள் செயலரும், வக்கீலுமான பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய உறுப்பினர்ராஜேந்திரன், முன்னாள் கொள்கை பரப்புச் செயலர்இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com