ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம் வரதராஜன்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
Published on

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.மேலும் கல்லூரி மாணவிகள் ஊழல் தடுப்பு பற்றி கேள்விகள் எழுப்பியபோது, அதற்கு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிறப்பாக திறமையாக கேள்வி கேட்ட மாணவிகளை டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.இறுதியில் பள்ளி மாணவிகள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மதர் ஞானம்மா கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com