என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தாக்கிய அரசு ஊழியர் கைது
    X

    மனைவியை தாக்கிய அரசு ஊழியர் கைது

    • அரியலூரில் முதல் மனைவியை தாக்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்குதல்

    அரியலூர்,

    அரியலூர் அருகே அயன்ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் அ.தி.மு.க. பிரமுகர், ஒப்பந்தக்காரராகவும் உள்ளார். இவரது மகன் தமிழரசன் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தமிழரசனுக்கும் ஏழேரி கிராமத்தை சார்ந்த மாங்கனிக்கும் திருமணமாகி 10ஆண்டுகள் ஆகின்றது.குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாங்கனி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மாங்கனி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழரசன் மாதம்தோறும் ரூ.6ஆயிரம் மாங்கனிக்கு ஜீவானம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து தமிழரசன் குழந்தை இல்லை என்ற காரணத்தை காட்டி அஸ்தினாபுரம் கிராமத்தை சார்ந்த திவ்யா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் தற்போது 8 மாத குழந்தை உள்ளது.முதல் மனைவி மாங்கனி தனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்று குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என தமிழரசனை வற்புறுத்தியுள்ளார்.

    இதில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி தகராறாக மாறி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி மாங்கனி கொடுத்த புகாரின் பேரில் கணவர் தமிழரசன், 2வது மனைவி திவ்யா, மாமனார் நடராஜன், மாமியார் வளர்மதி, கணவரின் தம்பி பிரபாகரன், மற்றும் சிந்து உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழரசன் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×