3440 பயனாளிகளுக்குரூ.20.17 கோடி நலத்திட்ட உதவி

அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி நலத்திட்ட உதவி
3440 பயனாளிகளுக்குரூ.20.17 கோடி  நலத்திட்ட உதவி
Published on

அரியலூர்,  

அரியலூர்,மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட திட்ட அலுவலர், இலக்குவன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் அரியலூர்சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலை வாணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித்தா, ஆர்.டி.ஓ. அரியலூர் இராம கிருஷ்ணன், உடையார் பாளையம் பரிமளம் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 14 துறை சார்பில் 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்,

நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு சரக இணை பதிவாளர் தீபாசங்கரி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com